வாழ்க்கையை மாற்றியமைக்கும் 'டாப் 5' சுய முன்னேற்ற புத்தகங்கள்!

self development books
self development books
Published on

Self-development Books: இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில், வெற்றிகரமாக முன்னேறவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடையவும் சுய முன்னேற்றம் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும். இதன் மூலம் புதிய திறன்கள் மற்றும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையின் பல அம்சங்களில் வெற்றியைக் காணலாம். இதற்கு வழிகாட்டும் வகையில், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பயனுள்ள டாப் 5 சுய முன்னேற்ற புத்தகங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

1.     தி 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்பிள் – ஸ்டீபன் கோவே

ஸ்டீபன் கோவே (Stephen Covey) எழுதிய இந்த புத்தகம், தொழில்முறை திறனை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகும். இந்த புத்தகம் 7 அடிப்படைப் பழக்கவழக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது. அவை:

  • முன்முயற்சியுடன் இருங்கள்:

  • முடிவை மனதில் கொண்டு தொடங்கவும்:

  • முக்கியமானதை முதலில் செய்யுங்கள்:

  • அனைவரும் வெற்றி பெற சிந்தியுங்கள்:

  • தெளிவாக பேசுங்கள்:

  • ஒன்றிணைந்து செயல்படுங்கள்:

  • தொடர்ச்சியான சுய மேம்பாடு முக்கியம்

இந்த 7 பழக்கங்கள் தனிப்பட்ட ஒழுக்கம், மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்க்க உதவும்.

2. அட்டாமிக் ஹேபிட்ஸ் – ஜேம்ஸ் கிளேயர்

ஜேம்ஸ் கிளேயர் (James Clear) எழுதிய "அட்டாமிக் ஹேபிட்ஸ்" ஒரு சிறிய பழக்கம் எப்படி பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி விரிவாகப் எடுத்துரைக்கும் புத்தகமாகும். பெரிய இலக்குகளை அடைய, மிகச் சிறிய, படிப்படியான மாற்றங்கள் எவ்வாறு பயனுள்ளவை என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

3. தி பவர் ஆஃப் ஹேபிட் – சார்லஸ் டுஹிக்

சார்லஸ் டுஹிக் (Charles Duhigg) எழுதிய "தி பவர் ஆஃப் ஹேபிட் என்பது பழக்கங்கள் எப்படி உருவாகின்றன, அவை நம் வாழ்க்கையை எப்படி வடிவமைக்கின்றன என்பதைப் பற்றி ஆழமாக உணர்த்தும் ஒரு பயனுள்ள புத்தகம். தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் பழக்கவழக்கங்களின் தாக்கத்தை விஞ்ஞான ரீதியாகவும், சுவாரஸ்யமான கதைகள் மூலமாகவும் விளக்குகிறது.

4. திங்க் அண்ட் க்ரோ ரிச் – நெப்போலியன் ஹில்

நெப்போலியன் ஹில் (Napoleon Hill) எழுதிய "திங்க் அண்ட் க்ரோ ரிச்" என்பது, பணக்காரராக ஆவது எப்படி என்பதை மட்டும் கற்றுகொடுக்காமல், வாழ்க்கையில் வெற்றிபெற தேவையான மனநிலையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றியும் ஒரு சிறந்த வழிகாட்டியாக வழங்குகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான நபர்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்த புத்தகம், உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முக்கியத்துவம் விளக்குகிறது. மேலும், தன்னம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் மூலம் எந்தவொரு இலக்கையும் அடைய முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் எது தெரியுமா? 
self development books

5. மைண்ட்செட்- தி நியூ சைக்காலஜி ஆஃப் சக்சஸ் – கரோல் ட்வெக்

கரோல் ட்வெக் (Carol Dweck) எழுதிய இந்த புத்தகம், நிலையான மனப்பான்மை மற்றும் வளர்ச்சி மனப்பான்மை ஆகிய இரண்டு அடிப்படை மனப்பான்மைகளைப் பற்றிப் பேசுகிறது. நம் மனப்பான்மை நம் வெற்றிக்கும் தோல்விக்கும் எவ்வாறு காரணமாகிறது என்பதை விளக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கி, கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

இந்த ஐந்து புத்தகங்களும் உங்கள் சுய முன்னேற்றப் பயணத்தில் மிகச் சிறந்த நண்பர்களாக உதவும் . ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு கோணங்களில் இருந்து சுய மேம்பாடு பற்றிய தகவல்களை வழங்கினாலும், அவை அனைத்தும் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறனை வெளிப்படுத்தவும், சிறந்த வாழ்க்கையை வாழ வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com