நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள்!

Signs That Indicate Financial Struggles
Signs That Indicate Financial Struggles

ஒரு குடும்பத்தின் பினான்சியல் ஃப்ரீடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதை எட்டுவதற்கு ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் முயற்சிக்க வேண்டும். ஆனால் சிலர் தாங்கள் ஏழையாக இருக்கிறோம் என்பதையே உணராமல், வாழ்க்கையில் எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் நிதி நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும் என்பதால், நீங்கள் வறுமையில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம். 

  1. மோசமான சேமிப்பு: நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள் என்பதற்கு முதல் அறிகுறியாக இருப்பது உங்களது சேமிப்புதான். அவசர செலவு அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகளுக்கு நிதியை நீங்கள் சேமிக்காமல் இருந்தால் அது உங்களின் ஏழ்மை நிலையைக் குறிப்பதாகும். 

  2. அதிக கடன்: கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் அல்லது கல்விக்கடன் போன்ற அதிக அளவிலான கடன் சுமைகளில் இருப்பது ஏழ்மை நிலையின் இரண்டாவது அறிகுறியாகும். குறிப்பாக, இத்தகைய கடன்களை செலுத்துவது கடினமாக இருந்தால், கடனின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும். இது உங்களது நிதி நிலையை மேலும் மோசமாக்கும். 

  3. தரமற்ற வீடு: தரமற்ற வீடுகளில் வாழ்வது, நெரிசலான தங்கும் இடம் அல்லது பணம் இல்லாததால் அடிக்கடி வீட்டை மாற்றுவது போன்ற சிக்கல்கள் உங்களின் ஏழ்மை நிலையை குறிக்கலாம். வீடு இல்லாத நிலை அல்லது வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்ற அச்சம், பொருளாதார நெருக்கடியின் கடுமையான அறிகுறிகளாகும். 

  4. குறைந்த சமூக செயல்பாடு: நிதி நெருக்கடி காரணமாக, குடும்ப நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் பங்களிப்பு இல்லாமல் போகலாம். 

  5. மன அழுத்தம்: நிதிப் பற்றாக்குறையால் மன அழுத்தம் ஏற்பட்டு ஆரோக்கியம் பெரிதளவில் பாதிக்கப்படும். பணத் தேவையால் நம்பிக்கையின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட உணர்வுகள் அதிகம் ஏற்படலாம். இதுவும் நீங்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறீர்கள் என்பதை காட்டும் காரணியாகும். 

  6. சத்தான உணவுகள் இல்லாமை: பணப் பற்றாக்குறையால் சத்தான உணவை உங்களால் வாங்க முடியாமல் இருக்கலாம். மலிவான உணவுகளை வாங்குவது, மற்றும் அவற்றையே முழுமையாக நம்பியிருப்பது உங்களின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். 

  7. வரையறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகள்: ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்விக்கான அணுக்கள் இல்லாமல் இருந்தால், அவர்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என அர்த்தம். இதன் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவது கட்டுப்படுத்தப்படலாம். 

இதையும் படியுங்கள்:
அனைத்திலும் வல்லுனராக இருப்பதற்கு எலான் மஸ்க் கூறும் தந்திரங்கள்! 
Signs That Indicate Financial Struggles

இப்படி பல அறிகுறிகள் நீங்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன. எனவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவற்றைக் களைவதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். இல்லையேல் காலம் செல்லச் செல்ல உங்களது நிதிநிலைமை மேலும் மோசமாகலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com