
நம்ம வாழ்க்கையில எப்பயாவது சில சமயம் வாக்குவாதம் வர்றது ரொம்ப சகஜம். வீட்ல, ஆபீஸ்ல, ரோட்டுலன்னு எங்க பார்த்தாலும் விவாதம் நடந்துகிட்டுதான் இருக்கு. ஆனா, விவாதத்துல யார் சத்தம் போட்டு பேசுறாங்கங்கிறது முக்கியம் இல்லை. யார் புத்திசாலித்தனமா, அமைதியா பேசுறாங்கங்கிறதுதான் முக்கியம். ஒரு விவாதத்துல மத்தவங்கள வீழ்த்தணும்னு நாம நினைக்கக் கூடாது. நமக்கு என்ன தோணுதோ, அதை பயமில்லாம, ஆணித்தரமா சொல்லிட்டாலே போதும், நாம ஜெயிச்சிடலாம். அதுக்கு சில சூப்பர் டிப்ஸ் இருக்கு பாக்கலாம் வாங்க.
விவாதத்தில் வெல்ல சில தந்திரங்கள்!
1. ஒரு டென்ஷனான சூழ்நிலையில அமைதியா இருக்குறது ஒரு பெரிய திறமை. விவாதம் பண்ணும்போது இதை கடைபிடிச்சீங்கன்னா, வெற்றி உங்க பக்கம்தான். நீங்க அமைதியாகவும், தன்னம்பிக்கையோடவும் உங்க கருத்தை சொல்றப்போ, அதுக்கு ஒரு தனி மதிப்பு கிடைக்கும். எதிராளி கோபப்பட்டாலும், நிலைமை மோசமாகாம உங்களால தடுக்க முடியும்.
2. நிறைய பேர், "நான் முதல்ல பேசணும்"னு நினைச்சு, சம்பந்தம் இல்லாம எதையாவது பேசிடுவாங்க. ஆனா, ஒரு விவாதத்துல மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு கவனமா கேட்டா, அவங்க பேச்சுல இருந்தே நமக்கு தேவையான பாயிண்ட்ஸ எடுத்துக்கலாம். அவங்க சொல்றத கேட்டு பதில் சொன்னா, நம்ம பதில் ஆணித்தரமா இருக்கும்.
3. மனசுல ஏகப்பட்ட போராட்டங்கள் நடக்கும்போது விவாதம் பண்றது ரொம்ப கஷ்டம். ஆனா, உணர்ச்சிகளை விட உண்மைகளுக்குத்தான் விவாதங்கள்ல பவர் அதிகம். அதனால, உங்க பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்லும்போது, உண்மையை மட்டும் பேசுங்க. இது உங்களை உணர்ச்சி இல்லாதவரா காட்டாது. மாறாக, உங்க உணர்ச்சிகளையும் உண்மைகளையும் சமநிலையில வச்சிருக்கீங்கன்னு காட்டும்.
4. சில சமயங்கள்ல ஒரு விவாதத்துல ஜெயிக்கிறதுக்கு ஒரு புத்திசாலித்தனமான வழி, அந்த விவாதத்தோட போக்கையே உங்களுக்கு சாதகமா மாத்திக்கிறதுதான். நீங்க ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாம மாட்டிக்கிட்டீங்கன்னா, அந்த பிரச்சனையை, "நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கலாம்"ங்கற மாதிரி மாத்திடுங்க. அப்போ, அது ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரா இருக்கிற பிரச்சனை இல்லாம, ரெண்டு பேருக்குமான பிரச்சனையா மாறிடும். எதிராளியும் உங்க வழிக்கு வந்துடுவாங்க.
5. உங்க மன அமைதியை விட வேற எதுவுமே பெருசு இல்லைன்னு புரிஞ்சுக்கோங்க. அதனால, ஒரு விவாதத்துல ஜெயிக்கிறதை விட, அதை எப்ப முடிக்கணும்னு தெரிஞ்சு முடிக்கிறதுதான் பெரிய வெற்றி. உங்க விவாதம் சண்டையா மாற போற மாதிரி தெரிஞ்சாலோ, பேசினதையே திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்கிற மாதிரி தெரிஞ்சாலோ, "இதை பத்தி அப்புறம் பேசலாம்"ன்னு சொல்லி அதை அங்கேயே முடிச்சிடுங்க.
இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி நீங்களும் புத்திசாலித்தனமா விவாதத்துல ஜெயிங்க.