ரத்தன் டாட்டா கூறிய ஊக்கமளிக்கும் சில பொன்மொழிகள்!

Ratan tata...
Ratan tata...Image credit - goodreturns.in/
Published on

த்தன் டாட்டா இன்று நம்மிடம் அவர் இல்லை என்றாலும் அவர் சொன்ன ஊக்கமிக்க வரிகளால் உயர்ந்தவர்கள் நாட்டில் பல பேர் உண்டு. ஒரு தொழில் அதிபராக என்னென்ன செய்யவேண்டும். எப்படி எல்லாம் செயல்பட வேண்டும். மனஉறுதி வேண்டும், வெற்றிக்கு அடித்தளத்தை எப்படி அமைக்க வேண்டும், என்பது போன்ற பல விஷயங்களை அவர் இந்த சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்து சென்றுள்ளார்.

சிறந்த தொழிலபதிராக சாதனைகள் புரிந்துள்ள அவர் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராவும் பெயர் பெற்றவர். மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட அவரது பேச்சு பலருக்கும் ஊக்கம் கொடுக்கக்கூடியது என்றால் அது மிகையாகாது. இத்தொகுப்பில் ரத்தன் டாடாவின் அத்தகைய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்

1- வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்து அப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும். மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது.

2- ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.

3- இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது. ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது. நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது.

4- நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன்.

இதையும் படியுங்கள்:
சந்தோஷத்தை வெளியிலே தேடறீங்களா? அப்போ இந்த கதையைக் கொஞ்சம் படிங்க!
Ratan tata...

5- எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும் சரியாகவும் செயல்பட்டவனாக அறியப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

6- நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள். நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி.

தன் ஊக்கம் தரும் வார்த்தைகளால் உலகிற்கே எடுத்துக் காட்டாய் வாழ்ந்த அவரின் உயிர் பிரிந்திருக்கலாம். ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் என்றும் நம் மனங்களை விட்டுப் பிரியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com