வாழ்க்கையில் முன்னேற இந்த இரண்டு சொற்கள் உதவுமே!

success
success
Published on

வாழ்க்கை மற்றும் தொழிலில் முன்னேற துடிப்பவர்கள் பல வழிகளில் முயற்சி செய்வார்கள். அது தேவை. நல்லது. எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த பூமியில் ஒவ்வொருவரும் வந்து அவரவர் பயணத்தை முடித்துக் கொண்டு விடை பெறுகின்றனர். இதற்கு விதி விலக்கே கிடையாது.

காலம், நேரம், வழி முறை வேறு படலாம். இப்படி பட்ட சூழ் நிலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஒருவருடைய ஈகோ தடையாக இருக்கக் கூடாது. நேரம் யாருக்கும் காத்துக் கொண்டு இல்லாமல் அடுத்த நிலைக்கு நகர்வது போல், வாழ்க்கையும் வேகமாக நகர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றது.

பலருக்கு இந்த ஈகோ என்ற பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருப்பத்துடன், மகிழ்ச்சியை பறிக்கின்றது. டென்ஷன் அதிகரிக்க வைத்து உடல் நலம் கெட வழி காட்டுகின்றது. உடன் மன நிம்மதி இழக்க செய்கின்றது. அதன் விளைவாக டிஸ்டர்ப் ஆகி குழப்பம் அடைய செய்கின்றது. நடைப் பெற்ற நிகழ்வு பற்றியே சிந்திக்க வைக்கின்றது. அதனால் நேரம் விரயம் ஆவதுடன் எப்படி சிக்கலை தீர்ப்பது என்று மேலும் மேலும் நினைக்க வைத்து வேறு மிக முக்கிய அலுவல்களை கவனிக்க முடியாமல் தவிக்க வைக்கின்றது.

நிதானமாக யோசித்துப் பார்த்தால் (அதை பலர் செய்ய தவிர்ப்பார்கள், செய்ய மாட்டார்கள்) தவறு நம் மீது தான் என்ற உண்மை புலப்படும். அதை ஒத்துக் கொள்ள விடாமல் தடுத்த ஈகோவின் இயலாமை தான் இவ்வளவு விரயத்திற்கும் முக்கிய காரணம்.

இதற்கு ஒரு சுலபமான வழி உண்டு. இந்த இரண்டு சொற்கள் உடனுக்கு உடன் கூறுவதை பழக்கப் படுத்திக் கொண்டு மறக்காமல் பின் பற்றி வந்தால், அடுத்த கட்டத்திற்கு நகர்வது தெரியாமல் நகர்ந்து சென்று சந்தர்ப்பங்களை இழக்காமல், மன நிறைவோடு முழ ஈடுப்பாட்டுடன் செயல் பட்டு பலன்களை அனுபவிக்கலாம். குறிப்பாக டென்ஷன் இல்லாத சூழ்நிலையில் பயணிக்க, தக்க சமயங்களில் உபயோகிக்கும் இந்த இரண்டு சொற்கள் சிறப்பாக உதவும். இவைகளை உபயோகிக்க பணம் தேவையற்றது. தேவையானது மனம் மட்டுமே.

இதையும் படியுங்கள்:
சளைக்காத மனமே வெற்றிக்குக் காரணம்!
success


அது சரி எவை அந்த பவர்புல் இரண்டு சொற்கள்?

ஒன்று மன்னிப்பு (sorry) கேட்பது.
அடுத்தது நன்றி (thanks) கூறுவது.


வாழ்க்கையில் முன்னேறிய பலர் இவைகளை மிகவும் எளிதாக செய்து நிம்மதியுடன் அடுத்த கட்டத்தில் சந்திக்கப் போகும் நிகழ்வுகளுக்கு ரெடியாகி விடுகிறார்கள்.

அப்படிபட்டவர்கள், இந்த இரண்டு சொற்களை உபயோகிப்பதை இயல்பாக செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றாக தெரியும் வாழ்க்கையில் முன்னேற நேரத்தின் பங்கு எவ்வளவு இன்றியாமையாது என்று. எனவே இந்த சக்தி மிக்க இரண்டு சொற்கள் கொண்டு சாதிக்க அவர்கள் தயங்குவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com