உங்கள் வாழ்வில் இந்த 10 விஷயங்களை நிறுத்திப் பாருங்களேன்!

motivation image
motivation imagepixabay.com

நீங்கள் குளிர்பான பிரியராக இருந்தால், உடனே அதை குடிப்பதை நிறுத்தி விட்டு இளநீர், பழச்சாறுக்கு மாறுங்கள். ஏன் என்ற காரணத்தை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றமே சொல்லிவிடும்.

ங்களுக்கு பிடித்தவர்கள் தானே என்று அவர்கள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு நீங்களே அதற்கும் போய் மன்னிப்பு கேட்காதீர்கள். பின்பு அதுவே பழக்கமாகிவிடும்.

ங்களுக்கு பழக்கமானவராகவே இருப்பினும் வேறு ஒருவரை பற்றி தவறாகவோ அல்லது எங்காவது கேட்ட புரளி என்று கூறினாலோ அதை தீர விசாரிக்காமல் நம்பாதீர்கள்.

ந்த விஷயத்தையும் மனதில் போட்டுக்கொண்டு ஓவர் திங்கிங் செய்யாதீர்கள். மன உளைச்சல், நேர விரயம் மற்றும் செய்யும் செயல் பாதிக்கக்கூடும்.

வெளியில் செல்லும் போது எப்போதும் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து செல்ல கற்று கொள்ளுங்கள். வெளியே வாங்கி கொள்ளலாம் என்று நினைப்பது பண விரயம் மட்டுமில்லாமல் உடல் நலத்திற்கும் கேடாகும்.

தேவையில்லாத வாக்குவாதம் செய்வதை நிறுத்துங்கள். நாம் சொல்வதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள் அப்படி புரிந்து கொள்ளாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைப்பது வீண் வேலையாகும்.

ன்னிப்பு மற்றும் நன்றியை சும்மா பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதற்கான மதிப்பு குறைந்துவிடும்.

ரு விஷயம் எல்லோருக்கும் பிடித்திருந்தால் நமக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அதை விட்டு தனித்துவமாக தெரிவதில் தவறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இனிக்கும் கரும்பில் இத்தனை ஆரோக்கியமா?
motivation image

தன் மீதும் அதிகம் எதிர்ப்பார்ப்பு வைப்பதை நிறுத்தி விடுங்கள். பின்பு அது நடக்கவில்லை என்றால் வருந்த தேவையில்லை.

நாப்கின் போன்றவற்றை வாங்கும் போது மிகவும் கூச்சப்பட்டு மறைத்து வாங்கி எடுத்து வர இனி தேவையில்லை. இந்த காலக்கட்டத்தில் ஆண்களோ, பெண்களோ எல்லோருக்குமே மாதவிடாய் என்பது உடலிலே நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வு என்ற தெளிவு வந்துவிட்டது. எனவே மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவோம்.

இந்த 10 விஷயங்களையும் செய்வதை நிறுத்தி பாருங்கள். பணம், நிம்மதி, ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலுமே பெரிதும் மாற்றத்தை உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com