வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை எனும்போது தோல்விகளும் வெற்றிகளும் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?
வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும், சமமான நிலையில் இருக்கும் மனதை கொண்டு விட்டாலே எதுவும் நம்மை பாதிக்காது.
ஆனால் இன்று இருக்கும் இளைய தலைமுறை தோல்வி என்றால் உடனே நத்தையாய் கூட்டுக்குள் சுருண்டு ஒடுங்கி விடுகின்றனர். சிலர் மதிப்பு மிக்க உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இதை தவிர்க்க நல்ல நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து வெற்றி தோல்வியை சமமாக மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இதோ இன்றைய தலைமுறைக்கான தன்னம்பிக்கை யூட்டும் படித்து மனதில் பதிந்த அறிஞர்களின் சில மொழிகள்.
1. பலம் கொண்ட உடலை விட தன்னம்பிக்கை கொண்ட மனமே சிறந்தது.
2. வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பின்னும் அதை இன்னும் ஒரு முறை முயற்சிப்பது.
3. சோர்வடைந்து விடாதே. வாழ்க்கை நீ எதிர்பாராத நேரத்தில்தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்.
4. நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.
5. எதிலும் வாழ பழகிக்கொள் அப்போதுதான் எதையும் தாங்கும் இதயம் வரும்.
6. உயரத்தை அடைய நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை உங்கள் மேல் இருப்பது அத்தியாவசியம்.
7. வெற்றி பெற விரும்பினால் தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்துச் செல்.
8. பணத்தால் சாதிக்க முடியாததை கூட முயற்சியால் சாதித்து காட்ட முடியும்.
9. சாதிக்கனும் என்று ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
9. உன் விடாமுயற்சியால் சுமைகளைக் கண்டு துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.
10. வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
11. வெற்றி துவக்கமும் அல்ல. தோல்வி முடிவும் அல்ல. முயற்சி ஒன்றே அதை முடிவு செய்யும்.
12. துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும். துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்.
13. துணிந்து கால் வை. போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடு. காலம் உன் கைப்பிடியில். வெற்றி உன் காலடியில்.
14. ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம் ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.
15. தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே நீ தனியாக போராடுவதே வெற்றிதான்.
16. நீங்கள் தனியாக பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணத்தில் நீங்களே உங்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்க வேண்டும்.
17. உன்னை நம்பு. உன் உழைப்பை நம்பு. உன் முயற்சியை நம்பு. உனக்காக உதவி செய்வார்கள் என்று யாரையும் நம்பி விடாதே.
18. பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.
19. வானவில் தோன்றும்போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகிறது.
20. எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.
"தயங்குபவர் கை கட்டுகிறார். துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்"- பிடல் காஸ்ட்ரோ சொன்னதை மனதில் நிறுத்தி துணிவுடன் முன்னேறுவோம் வாருங்கள்.