தோல்வி தரும் சவால்களை எதிர்கொள்வதே வெற்றி!

Success is in facing challenges!
Success image
Published on

சாதனைகள் செய்யவேண்டும் என்றால் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும். சவால்களை பெரிய சிந்தனையோடு எல்லாம் எதிர்கொள் இருந்தால் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியாது. எல்லா சவால்களுமே கடினமானது இல்லை என முதலில் முடிவு செய்து அதற்கு பிறகு நாம் அந்த சவால்களோடு போராட வேண்டும். போராடினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு வெற்றியாளரின் பின்னாலும் ஒளிந்திருப்பது படிப்பினைகள்தான் அந்த படிப்பினைகளை கொடுப்பது தோல்விகள் தான் முதலில் தோல்வியிடம்தான் நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அது கொடுக்கும் பயிற்சிதான் நாளைய வெற்றியின் இலக்கை சுலபமாக அடைய நமக்கு வழிகாட்டும்.

ஹாரி ஹோவ்தினி என்பவர் மேஜிக் நிபுணர் மற்றும் தப்பிக்கும் கலைஞர். எத்தகைய பூட்டுப்போட்ட அறையில் அவரை அடைத்தாலும் அந்தப் பூட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்துவிடுவார். வேடிக்கையாகவும், பரிசோதனைக்காகவும் உலகமெங்கும் சென்று பல நாடுகளின் சிறைகளில் அவர் பலமான சிறைக் கதவுகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டும் அவர் வெளியேவந்து சாதனை படைத்துவிட்டார். அமெரிக்காவின் சில மாகாணங்களின் சிறையிலும் கூடத் தனது வித்தைகளைக் காட்டினார்.

ஆனால், பிரிட்டிஷ் நாட்டில் ஒரு சிறையில் அவர் முயற்சித்தபோது முடியவில்லை. இரண்டு மணிநேரம் ஆகியும் அவரால் பூட்டைத் திறக்க முடியவில்லை. ஒரு சூழலில் அவர் மிகவும் சோர்வடைந்து. வேர்த்து வியர்த்துப் போய்விட்டார். களைப்படைந்த அவர் அந்தக் கதவிலேயே சற்று ஓய்வாகச் சாய்ந்தார். அப்போது அக்கதவு திறந்து கொண்டது. அப்போதுதான் கதவே பூட்டப்படவில்லை என்பதையும், அதேசமயம் தான் மனதில் பெரிதாகக் கற்பனை செய்து முயன்று தோற்றதையும் எண்ணிச் சிரித்துக் கொண்டார் ஹாரி ஹோவ்தினி.

இதையும் படியுங்கள்:
வெற்றியடைய புத்தர் சொன்ன அருமையான போதனை!
Success is in facing challenges!

பெரிய சாதனைகளைப் படைப்பவர்களில் சிலர் தங்களிடம் வரும் சவால்களைப் பெரிய சிந்தனையோடே பார்க்கும்போது எளிதாகத் தோற்றுவிடுவார்கள். காரணம், எல்லாச் சவால்களும் அபாயமானதல்ல என்பதை உணராமல் அவர்கள் எல்லாவற்றையும் பெரிதாக எண்ணி மாய வலையில் சிக்கிக் கொள்வதே இதற்குக் காரணம்.

''வெற்றியைவிடத் தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.''

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com