உங்களையே நீங்கள் சமாளிக்க கற்றுக் கொண்டால் வெற்றி உங்களுக்குத்தான்!

Motivatioin image
Motivatioin imageImage credit - pixabay.co

ரு மனிதருக்கு தன்னைப் பற்றி சகலமும் தெரிந்திருக்க வேண்டும். அவரது வெற்றிக்கும் தோல்விக்கும் அவரே தான் காரணம். தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த ஒருவர்தான் வாழ்வில் வெற்றி பெறுகிறார்.

தனக்கு எது பலம் என்பதில் ஒரு மனிதருக்கு தெளிவு வேண்டும். அதேபோல பலவீனங்களையும் அறிந்திருப்பது அவசியம். தான் சிறந்ததாக இருக்கும் விஷயங்களை மேலும் மெருகேற்றிக் கொண்டால் அவரது ஆற்றல் கூடும். பலவீனங்களை அனுமானிக்கத் தெரிந்து கொண்டு அவற்றை தகர்த்து எறியவோ, விட்டு விலகவோ வேண்டும்.

தனது இயல்பான திறமையை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம். வெற்றி பெற எது தேவை என கண்டறிந்து விட்டால் அதை கற்றுக் கொண்டு வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம். தான் எந்தெந்த விஷயங்களில் ஸ்ட்ராங்காக இருக்கிறோம் என்று தெரிந்து அதில் நேரத்தை செலவழித்து இன்னும் தனது திறமையை அதில் வளர்த்துக் கொள்ளலாம்.

பலவீனங்களை சமாளிக்க நேரத்தை வீணாக்க தேவை இல்லை. சிலர் வாழ்க்கையில் தோற்பதற்கு பலவீனமான பகுதிகளோடு மல்லுக்கட்டுவது தான். ஒருவர் தனது பலவீனங்களை விட்டு வெளியே வந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். அதற்கு தன் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்.

பலவீனமான காரியங்களைச் செய் என்று மனது தூண்டும்போது தன் மனதை சமாளிக்கும் திறன் வேண்டும். மனதிற்கு வலிமையான கட்டளை இட வேண்டும். பலவீனமான காரியங்களின் பக்கம் போவதோ அவற்றை எண்ணுவதோ கூடாது என்று வலிமையான கட்டளையிட்டு உங்களை நீங்களே சமாளித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனுக்கு எதிரிகள் இருக்கலாம். அவர்கள் சூழ்நிலையின் காரணமாக உருவாகிறவர்கள். ஆனால் உண்மையான எதிரி அவன் மனதில் தான் உள்ளது. தன்னை கோழையாக, செயலற்றவனாக, எதிலும் தோற்பவனாக கற்பனை செய்து கொண்டு சுய இரக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களால் எந்தக் காலத்திலும் ஜெயிக்க முடியாது.

எனவே தன் மனதின் உள்ளிருக்கும் எதிரிகளை சமாளிக்க ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்விகள் வந்தால் அவற்றை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் வாழ்வில் சிக்கல்கள் வரும். அவற்றை சமாளிப்பதற்கு தன்னை ஒருவர் தயார்படுத்த வேண்டும்.

அவநம்பிக்கை தலைதூக்கினால், அதை அடக்கி சமாளித்து, உன்னால் முடியும் என்று தனக்குத்தானே நம்பிக்கை ஊட்ட வேண்டும். அனைவரது வாழ்க்கைப் பாதையையும் அவரவர்களே தான் தீர்மானிக்க வேண்டும் இன்னொருவர் வந்து நமது வளர்ச்சிக்கு திட்டம் தீட்டி தரவோ அல்லது செயல்களை முடித்துக் கொடுக்கவோ மாட்டார்கள்.

பிறர் தன்னைத் தேடி வந்து உதவுவார்கள் என்று அமைதியாக இருக்கக் கூடாது. தனக்கு என்ன வேண்டுமோ அதை தகுதியான நபர்களிடமிருந்து கேட்டுப் பெறலாம். அது அறிவாக இருக்கலாம் பணமாக இருக்கலாம். உதவியாக இருக்கலாம் அல்லது நேரமாக இருக்கலாம்.

எனவே ஒரு மனிதன் தன்னைத்தானே சமாளிக்க கற்றுக் கொண்டால் அவனுக்கு வாழ்க்கையில் வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com