உலகை வெல்ல உங்களின் தனித்துவமே ஆயுதம்: புகழ்பெற்ற ஆளுமைகளின் வெற்றிப் பாடங்கள்!

ஐன்ஸ்டீன், ஶ்ரீதர் போன்ற ஜாம்பவான்களின் பாதையில் தனித்தன்மையை வளர்த்து சாதனை படைப்பது எப்படி?
தனித்தன்மை
தனித்தன்மைAI image
Updated on

ஐன்ஸ்டீன், ஆப்பிள் போன்ற உதாரணங்கள் மூலம், எந்தத் துறையிலும் தனித்தன்மை கொண்டவர்களே நிலைத்த வெற்றியைப் பெறுகிறார்கள். மற்றவரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டாலும், அவர்களை அப்படியே பின்பற்றாமல், தன் சொந்த வலிமை, துணிவு, சீரிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், எதிர்மறையான தனித்தன்மை சமூகத்துக்கும், மணவாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும்.

தனித்தன்மை என்பது ஒருவர் தன் சொந்த பழக்க வழக்கங்களையும் கொண்டிருப்பது‌. அணுவை ஆய்ந்த எல்லோருமே ஐன்ஸ்டீனை காப்பி அடித்துவிட்டதாகச் சொல்ல முடியாது.‌ ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஒருவர் வேலை பார்த்து சுயமாக கம்ப்யூட்டர் தயாரித்தால் அவர் அடியொற்றி நடப்பவர் ஆகமாட்டார். விஞ்ஞானியாகட்டும், தொழிலதிபராகட்டும், வாழ்க்கையில் உயர்ந்த எவருமே இன்னொருவரை இன்ஸ்பிரேஷனாக கொண்டிருக்கலாம்.

காதலை நாசூக்காக சொன்னவர் ஶ்ரீதர். கனமானப் பிரச்னைகளை சுலபமாகத் கையாளுபவர் பாலசந்தர். வாழ்க்கையின் உயிரோட்டத்தை வளமாகச் சித்தரித்தவர் பாரதிராஜா. ஶ்ரீதரின் பாணியைக் கடைபிடிக்க முயன்றவர் தோற்றுப்போனார்கள்.

கே. பி. சார் டாலெண்ட் நமக்கில்லை என்று சிலர் பின்வாங்கினார்கள்.‌ பாரதிராஜாவை காப்பி அடிச்சது என்று ஒரு சிலரை உலகம் ஒதுக்கியது. சிலருடைய தனித்தன்மை அவர்களோடு முடிந்து விடுகிறது.

தனித்தன்மை உடையவர்கள் மலிவான புகழுக்கு ஆசைப்படுவதில்லை.‌ மக்களின் கவனத்தை வெகு நளினமாகவே தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டு விடுகிறார்கள். பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகிறார்கள். தங்கள் சொந்த வலிமை மற்றும் துணிவைக் கொண்டு அவர்கள் எல்லாவற்றையும் சாதிக்கிறார்கள்.

சினிமாவில் மட்டுமல்ல எந்தத் துறையிலும் தனித்தன்மை உள்ளவர் தான் நிற்கிறார். சிலருடைய தனித்தன்மை சமூகத்திற்கும் பயன்படுவதால் அமைகிறது. சட்ட நிபுணர்களும், எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், விளையாட்டு வீரர்களும் தங்கள் தனித்தன்மையை தன் தாங்கள் வாழும் சமூகத்திற்கு வழங்குகிறார்கள்.

தனித்தன்மை
தனித்தன்மைAI image

தனித்தன்மைதான் ஒருவரை சராசரியில் இருந்து மேம்படுத்திக் காட்டுகிறது.‌ எதிலாவது தேர்ச்சி பெற்றவர்களின் வார்த்தையைத்தான் மக்கள் செவிமடுக்கிறார்கள்.‌ தனித்தன்மை என்று குறிப்பிடுகிறபோது நலம் விளைவிக்கக் கூடிய அம்சங்களைத்தான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்‌ தீமை பார்க்கக்கூடிய அம்சங்கள் எதிர்மறையானது.

இதையும் படியுங்கள்:
உங்களை 99 சதவீதம் பேரை விட முன்னேற்றும் அந்த சீக்ரெட் இதோ!
தனித்தன்மை

தனித்தன்மை என்பது ஒருகுறிக்கோள் அல்லது காரியம் பற்றியதாக இருக்கவேண்டும்.‌ தனக்கும் சமூகத்திற்கும் அதன் மூலம் நன்மை கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். எதிர்மறையான தனித்தன்மை மணவாழ்விலும், சமயத்தொடர்பிலும், பொருள் ஈட்டலிலும் விரும்பத்தகாத விளைவுகளையே உண்டு பண்ணும்.

பிரசித்தி பெற்ற கிரிமினல்களின் தனித்தன்மையால் மற்றவர்களுக்கு இடையூறும் நாட்டுக்குத் தலைவலியும் தான் ஏற்படும்‌. தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறவர்கள் முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் தங்கள் எண்ணங்களை நிலைப்படுத்திக் கொள்ள முடியாது.

தங்களின் தனித்தன்மையை நிலைநாட்ட விரும்புகிறவர் அடுத்தவரின் விமர்சனத்தையோ கேலிப் பேச்சையோ பொருட்படுத்தக் கூடாது. விமர்சிக்கப்படுகிறவரிடமோ அவருடைய காரியத்திலோ எந்த தவறும் இல்லையென்று தெரிய வரும்போது விமர்சனம் தன் வீரியத்தை இழந்துவிடுகிறது. ஒருவர் தன் தனித்தன்மையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அடுத்தவரிடம் இல்லாத சிறப்பியல்பும் சீரிய எண்ணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். எது உங்கள் சிறப்பு அம்சமோ அதை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களை உலகிற்கு அடையாளம் காட்டும் தனித்தன்மை.

இதையும் படியுங்கள்:
உங்கள் இலக்கை அடைய இதுதான் ஒரே வழி!
தனித்தன்மை

இசை, விளையாட்டு, ஓவியம், பொரியியல் நுட்பம் எதுவானாலும் அதில் உங்கள் தனித்துவம் வெளிப்பட வேண்டும் தனித்தன்மையை முறையாக வளர்த்துக் கொண்டவருடைய பர்சனாலிட்டி உன்னதமானது. இந்த தனித்தன்மையை அவர்கள் எக்காரணம் கொண்டும், எந்த சுழல் நிலையிலும் அவர்கள் மாற்றிக்கொள்வது கிடையாது‌. வாழ்க்கையின் வெற்றிக்கு தனித்துவம் மிக முக்கியமானது.

தனித்துவமான சீரிய எண்ணங்களையும் முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்வதன் மூலம், எந்தத் துறையிலும் நிகரற்ற வெற்றியை ஈட்டி, உலக அரங்கில் உங்களை ஒரு வெற்றியாளராக முழுமையாக உருமாற்றிக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com