இனிய சொற்களே இன்பமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்!

Motivation Image
Motivation Imagepixabay.com
Published on

நாம் பேசும் வார்த்தைக்கு மிகப்பெரிய சக்தி உண்டு என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம். நம் எதிரில் இருப்பவரிடம் எப்படி நாம் வார்த்தைகளை விட்டு பேசுகிறோமோ அதன் எதிர்வினை தான் நமக்கு கிடைக்கும். ஆனால் பலர் அப்படி செய்வதில்லை. தான் எடுத்தெறிந்து பேசினால், கோபமாக பேசினால் நம்மிடம் ஒரு மரியாதை இருக்கும் என்று நினைக்கிறார்கள் அது முற்றிலும் தவறு.

மனதில் அழுக்குகளை வைத்துக் கொண்டு வெளியே செய்கின்ற ஒப்பனைகள் வெறும் முகப்பூச்சாக குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.

நம் புன்னகை கூட போலியாக வெளிவேஷமாக இருப்பதைச் சிறிது நேரத்தில் காட்டிக் கொடுத்து விடும்.

ஆகையால் மனம் சுத்தமாக வேண்டும் என்றால் ஒவொரு புலனும் சுத்தமாக இருக்க வேண்டும் கண்களில் இருக்கும் அசுத்தம், காதுகளில் இருக்கும் அசுத்தம் போலவே, வார்த்தைகளில் இருக்கும் அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் நம் எண்ணைங்களை சுத்தமாக்க வேண்டும். நாம் நல்லவற்றை சிந்திக்கும் போது, நம் கண்கள் நல்ல ஓவியங்களைப் பார்க்கிறது.

நம் காதுகள் நல்ல வார்த்தைகளைக் கேட்கிறது. அப்போது மனம் தானாகவே சுத்தமாகி விடும்.

இதைத் தான் வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் .

"இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று "என்று கூறுகிறார்.

இனிய சொற்கள் பரந்து இருக்கும்போது, கடுஞ் சொற்களைக் கையாள்வது, பழுத்தப் பழங்கள் குவிந்து கிடக்கையில், காய்களைத் தேடிப் பிடித்து உண்டு, அதன் பின் அதன் கசப்பை உணர்வது போல இருக்கிறது என்று அருமையாகச் சொல்லுகிறார். இனிமையான நல்ல பழங்கள் போன்று நாம் பேசும் போது கனிவு மிகுந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம்.

பிறரிடம் இனிய சொற்கள் பேசுவோம். பிறகு பாருங்கள் உங்கள் மனசும் இனிமையாக இருக்கும். வாழ்க்கையும் இனிமையாக அமையும். இனிய சொற்களே இன்பமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com