சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொள்ளுங்கள்!

motivation image
motivation imagepixabay.com
Published on

பெரிய ஆற்றில் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படவே நடுவழியில் அப்படகு கவிழ்ந்தது. படகில் இருந்த பலர் மூழ்கிவிட நீச்சல் தெரிந்த இரண்டு ஆண்களும் படகோட்டியும் மட்டும் தப்பி ஒரு பாறையில் ஏறி நின்றுகொண்டனர். 

அப்போது இன்னொரு படகும் வந்தது. 

"ஏறுங்கள், ஏறுங்கள் வெள்ளம் அதிகமானால் மேலும் ஆபத்து. உங்களை கரை சேர்த்து விடுகிறேன் வாருங்கள்" என்றான் அதை ஓட்டி வந்தவன்.

படகோட்டியும் தப்பி நின்ற ஒரு பயணி மட்டும் அதில் ஏற இன்னும் ஒருவன் மட்டும் தயக்கத்துடன் வர மறுத்தான். 

பயணி அவனிடம், "வந்துவிடு! இதுதான் சந்தர்ப்பம் . தப்பி கரைக்குப் போய்விடலாம்" என்றார். 

“வேண்டாமப்பா! இந்தப் படகும் கவிழ்த்தால் என்னுடைய நிலைமை என்னாவது! நான் வரவில்லை... வெள்ளம் வற்றிய பிறகுதான்  வருவேன்," நீங்கள் செல்லுங்கள் என்று படகில் ஏறாமல் அடம் பிடித்தான். 

படகும் கிளம்பிவிட்டது. அவர்கள் அனைவரும் கரையேறி தப்பித்தனர். வெள்ளம் அதிகமாகவே பாறையே மூழ்கி அதில் நின்றவன் மூழ்கிவிட்டான். 

வாழ்க்கையில் எப்போதாவதுதான் நல்ல சந்தர்ப்பம் வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள் படிக்கும் பருவமாகிய இளமையை வீணாக்கிவிட்டால், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினமாகிவிடும்... சரிதானே? 

ஆதலால் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com