திறமை என்பது வெற்றிக்கான தகுதி!

Talent is the key to success!
Motivational articlesImage credit - pixabay
Published on

திறமை என்பது வெற்றிக்கான தகுதி. விடாமுயற்சி வெற்றிக்கான வழி. இந்த இரண்டும் அனைத்தையும் வெல்லும் வலிமை கொண்டது. 

எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற திறமை அவசியம். அதற்கு முதலில் திடமான லட்சியம் வேண்டும். கூடவே அந்த லட்சியத்தை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியும் வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற திடமான வைராக்கியத்தின் விளைவாக இருக்கக்கூடிய செயல் திறன் மற்றும் அந்த செயலில் இருக்க வேண்டிய ஒழுக்கம் ஆகியவையும் அவசியம். 

காலம் தாழ்த்தாமல் எடுக்கும் முயற்சியும், அதற்குத் தேவையான ஆரோக்கியமான மனமும், உடலும் இருந்தால்தான் அனைத்தையும் வெல்லும் வலிமை கிடைக்கும். 

விடாமுயற்சியும், கடின உழைப்பும், அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி செல்வதற்கு தன்னம்பிக்கையும் அவசியம். வாழ்வில் குறிக்கோள் மட்டும் இருந்தால் போதாது. அதை அடைய சரியாக திட்டமிடுதலும்,  அடையும்வரை வேறு எந்த சிந்தனையும் இன்றி செயல்படுவதும் அவசியம். 

வெற்றி பெற எல்லாத் தளங்களிலும் (fields) திறமையை வளர்த்துக் கொள்வதும், பேச்சிலும் செயலிலும் மற்றவரை வசீகரிக்கும் ஆளுமை கொள்வதும், முக்கியமாக நம் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தும் மொழியாற்றலும் (communication skill) தேவை என கருதப்படுகிறது. வெற்றி பெற்றவர்களிடம் "நேரம் தவறாமை" என்ற அரிய பண்பு காணப்படும். தோல்வியைக் கண்டு துவளாத மனமும், மற்றவருடைய கேலி கிண்டல்களை பொருட்படுத்தாமல் முன்னோக்கி செல்வதும் என நிறைய பண்புகள் நிறைந்திருக்கும்.

எதை சாதிக்க விரும்புகின்றோமோ அந்த செயலை தொடர்ந்து செய்யும்போது அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவமே நல்ல வெற்றியை தேடித் தரும். சறுக்கல்கள் வந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முன்னேற முயற்சிப்பதும், பல வெற்றியாளர்களின் கதைகளை, அனுபவங்களை படிப்பதும், எப்போதும் பாசிட்டிவ் எண்ணங்களுடன் செயலாற்றுவதும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
நடப்பவை எல்லாம் நன்மைக்கே!
Talent is the key to success!

திறமை, உழைப்பு, விடாமுயற்சி என்ற தாரக மந்திரத்துடன் இறை நம்பிக்கையும் சேர்ந்துவிட வெற்றி கரமான மனிதனாகத் திகழலாம். வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி. தோல்வியை புறக்கணிக்கும் மக்கள் வெற்றியும் புறக்கணிக்கிறார்கள்.

உங்கள் முதல் வெற்றியின் பின்னர் ஓய்வெடுக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் இரண்டாவதாக தோல்வி அடைந்தால் உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன - அப்துல்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com