Thalapathy Vijay Quotes: தளபதி விஜய் கூறிய 15 மேற்கோள்கள்!

Thalapathy Vijay
Thalapathy Vijay
Published on

பல கோடி மக்களின் இதயத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர் விஜய். தன் வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து சினிமாவில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க போராடியவர் விஜய். அந்தவகையில் அந்தப் போராட்ட வாழ்க்கையில் விஜயின் அனுபவங்களிலிருந்து அவர் கூறிய சில மேற்கோள்களைப் பார்ப்போம்.

1.  இரண்டு விஷயங்கள் உங்களை வரையறுக்கும். ஒன்று உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது உங்கள் உறுதியும், உங்களிடம் எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையும்.

2.  அமைதியாக நகர்வுகள் செய்யுங்கள், வெற்றி சத்தம் எழுப்பட்டும்.

3.   உங்கள் பணியை நீங்கள் முடித்திருந்தால், அது உங்களால் அல்ல, உங்கள் திறமையால். நீங்கள் நினைக்கும் அனைத்தையும் திறமை செய்யும்.

4.   எதிர்மறையான சூழ்நிலையில் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருங்கள்.

5.  இலக்கு எதுவாக இருந்தாலும், அதை அடைவதற்கான சரியான வழியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6.   நல்ல நண்பன் போல முகமூடி அணிந்துக்கொண்டு நம்முடன் இருக்கும் கோபம்தான் நம்முடைய முதல் எதிரி.

7.  நம்ம மேல ஆயிரம் பேர் கல் எறியலாம். அதுக்குன்னு நாமும் திரும்பி எறியனும்னு அவசியம் இல்ல. எறியப்பட்ட கற்களை எடுத்து நம்ம சாம்ராஜ்யத்தையே உருவாக்கலாம்.

8.  நம்ம பார்வை சரியாக இருந்தால், நாம் பார்க்கும் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கும்.

9.  ஒரு வாய்ப்பை இழந்தால், கண்ணீர் சிந்த வேண்டாம். அந்த கண்ணீர் உங்கள் கண்முன் இருக்கும் மற்றொரு சிறந்த வாய்ப்பை மறைத்துவிடும்.

10. எதுக்காகவும் காத்துட்டு இருக்க வேண்டாம். சரியான நேரம்ன்னு எதுவும் இல்லை. Start Now.

இதையும் படியுங்கள்:
Nelson Mandela Quotes: நெல்சன் மண்டேலா கூறிய 15 பொன்மொழிகள்!
Thalapathy Vijay

11.  கடிகாரத்தைப் பார்க்காதீர்கள். செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்.

12.  புத்திசாலியாக இருங்கள்! உங்கள் முயற்சியை பற்றி யாரும் கவலைக் கொள்ளமாட்டார்கள், அதன் முடிவுகளைப் பற்றியே கவலைக்கொள்வார்கள்.

13. எப்படி ஜெயிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், எதையும் இழக்கப் போவதில்லை என்பது மட்டும் நிஜம்.

14. எல்லோரும் உன்னை நேசிக்க வேண்டும் என்று நினைக்காதே. வெறுப்புகள் இருந்தால்தான், கொஞ்சம் வேடிக்கை இருக்கும்.

15. சவால்கள் இல்லாத வாழ்க்கை சலிப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com