எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றி வாகை சூடுகிறது!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ள்ளியில் படித்த காலத்தில் ஒரு பெண் மாதந்தோறும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் போய்விடுவாள். அவளைப் பார்த்த  ஆசிரியைக்கு  இது மன வருத்தத்தை அளித்தது. காரணம் என்னவென்றால்  அவளுக்கு அம்மா இல்லை. அவளால் நன்றாக நடக்கவும் முடியாது.  இரண்டு கால்களும் மடங்கி இருந்தது. அந்த ஆசிரியைக்கும் காலில் இது போன்ற பிரச்சனை இருந்ததால் அவள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். எல்லா பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று முயற்சி செய். அதை எண்ணத்தில் பதியவை. கட்டாயமாக உன்னால் தேறி விட முடியும். சோம்பல் படக்கூடாது. அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று முயற்சியை ஒத்தி போடக்கூடாது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உன்னால் ஐந்து பாடத்திலும் வெற்றியடைய முடியும் .உன் சொந்த காலில்  நீ நிற்க வேண்டும். அதற்கு படிப்புதான் அஸ்திவாரம். நீ ஹாஸ்டலில் தானே தங்கி படிக்கிறாய். அங்கு உனக்கு நிறைய நேரம் கிடைக்கும் அல்லவா! அப்பொழுது தனிமையில் அமர்ந்து கவனத்தை செலுத்தி படி. தெரியாதவற்றை அடுத்தநாள் வந்து என்னிடம் கேள். நான் சொல்லித் தருகிறேன் என்று உற்சாகப்படுத்தினார். 

அதன் பிறகு அந்த மாணவிக்கும் நம்மிடம் அன்பு காட்டி நம்மை ஊக்கப்படுத்த ஒரு ஆசிரியை இருக்கும் பொழுது, நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எழ அதிலிருந்து அமைதியாக அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். எப்பொழுதும் ஏதாவது ஒரு குறும்பை செய்து மாட்டிக்கொள்ளும் அவள் அதன் பிறகு படிப்பு படிப்பு படிப்பு என்று முழுக் கவனத்தையும் அதில் பதிய வைத்தாள். கவனிச்சிதறல் ஏற்படும் பொழுதெல்லாம் அதை தவிர்ப்பதற்காக ஒயர் கூடைகள் பின்ன கற்றுக் கொண்டாள். அதில் கவனத்தை திசை திருப்பினாள். அதன் பிறகு படிக்க ஆரம்பித்தால் நன்றாக மனதில் பதிகிறது என்று கூறினாள். இப்படியாக படித்து அந்த ஆசிரியரே பெருமைப்படும் விதத்தில் தேர்ச்சி பெற்றாள். போனஸாக ஒரு கைத்தொழிலும் கற்றுத் தேர்ந்து அதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மணி பர்ஸ், ஸ்கூல் பேக்குகள், டிசைன் டிசைனாக கூடைகள் செய்து விற்று சிறுசேமிப்பையும் கற்றுக் கொண்டாள்.

ஹாஸ்டலில் படித்த மாணவிகளில் முதன்முதலாக ஸ்கூல் பேக்கை விற்று பணம் சம்பாதித்த பெருமை அவளைத்தான் சேரும். அதன் பிறகு பேச்சை குறைத்து பல்வேறு கலைத் தொழிலை கற்றுக்கொண்ட பெருமையும் அவளுக்கு உண்டு. இன்னும் சொல்லப் போனால் "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்பதற்கு இணங்க நடந்து கொண்டவள் அவள்தான். அவளிடம் இருந்து கோலம் போடுவதை கற்றுக் கொண்டவர்கள் பலர் உண்டு. அவ்வளவு திறமையையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்ததை எல்லாம் வெளியிட சந்தர்ப்பமாய் அமைந்தது ஆசிரியை கொடுத்த அந்த உற்சாகமும் எண்ணப் பதிவும்தான். 

எதில் வெற்றி அடைய வேண்டுமானாலும் எண்ணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். எண்ணம் நன்றாக அமைந்தால் பல்வேறு ஆற்றலை அது கொடுக்கும். அந்த ஆற்றலானது நாம் எண்ணியபடி செயல்பட தூண்டில்போடும்.  பிறகு எண்ணம்போல் வாழ்க்கை அமைவது கஷ்டமா என்ன? 

எண்ணங்கள் நன்றாக  இருந்தால்,

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்

நன்றாக அமையும்!

எண்ணங்களைச்

செயலாக்கும் ஆற்றலே

வெற்றியாக மலர்கிறது. 

எண்ணம் போல்

வாழ்க்கை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com