

The Art of Noticing: உலகம் எப்படி இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பவர் தான் வெற்றிப் படிக்கட்டில் ஏற தகுதியானவராக இருப்பார். ஒரு விஷயத்தில் நாம் வெற்றிப் பெற அதில் , நிபுணத்துவம் பெற்றிருப்பது அவசியம். அதற்கு முதலில் நம்மை சுற்றி உள்ள மனிதர்களையும் , சுற்றியுள்ள விஷயங்களையும் , ஒவ்வொரு செயல்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நாம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது , நம்முடன் வருபவர்கள் யாரென்று நமக்கு தெரியாது. ஆனால் , காவல் துறையை சேர்ந்த ஒருவர் அந்த கூட்டத்தில் யாரேனும் திருடன் இருக்கிறானா? என்பதை உடனே கண்டுபிடித்து விடுவார். ஒருவர் சரியாக வண்டி ஓட்டிக் கொண்டு வந்தாலும், தூரத்தில் இருந்தே அவர் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறார் என்பதை காவலர் அறிவார்.ஒரு சில குற்றவாளிகள் தானாகவே வந்து காவல்துறையிடம் மாட்டிக் கொள்வார்கள்.
காவல்துறை மட்டுமல்ல , ஒரு சில ஷோரூம்களுக்கு சென்றால் , உங்களை பார்த்த உடன் , நீங்கள் என்ன விலைக்கு பொருள் வாங்கப் போகிறீர்கள் என்பதை அவர் புரிந்துக் கொள்வார். சில நேரம் வரும் வாடிக்கையாளர் விலை விசாரிக்கத் தான் வந்துள்ளார் என்பதையும் உணர்ந்துக் கொண்டு விலை குறைவாக சொல்வார்கள். இவை அனைத்துமே மற்ற விஷயங்களை கூர்ந்து கவனிக்கும் திறனால் மாத்திரமே,ஒருவரால் இந்தத் திறனை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
எல்லாவற்றையும் நாம் கவனிக்க ஆரம்பித்தால் எதுவும் நம் மூளையில் தங்காது. உதாரணமாக ஒரு ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றால், அங்கு யார் யார் இருக்கிறார்கள்? அவர்களின் லாபம் எவ்வளவு இருக்கும் , சர்வரின் உடை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் , நீங்கள் உணவின் ருசியை மறந்து எதற்காக வந்தோம் என்பதை விட ஆராய்ச்சியில் தான் மனம் செல்லும்.
ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றால் சர்வரின் கைகள் சுத்தமாக இருக்கிறதா? சாப்பிடும் தட்டு, கிண்ணம் , ஸ்பூன் எல்லாம் சுகாதாரம் மிக்கதா? உணவின் சுவை எப்படி இருக்கிறது , அதில் என்னன்ன கலந்து இருப்பார்கள் எந்த சிந்தனை உங்களின் நோக்கத்தை சரியாக கொண்டு செல்லும்.
1. ஒருவரை கவனிக்கும் முறை:
முதலில் பேசும் போது அவரின் கண்களை பார்க்க வேண்டும் , அதன் பிறகு கைகள், அவரது உடை , காலணி , கையில் இருக்கும் வாட்ச், பேசும் தொனி , அமரும் பாணி ஆகியவற்றை வைத்தே ஒருவரை பாதியளவுக்கு மதிப்பிட முடியும்.
இப்போது கண்களில் தெரியும் உணர்வுகள் , பேசும் போது அதில் தெரியும் உணர்வுகள் , அவர்களின் உடல் மொழி , மற்றவர்களிடம் அவர்கள் நடந்துக் கொள்ளும் முறை , உடைகளின் நேர்த்தி ஆகியவற்றை கவனித்து கொள்ளுங்கள்.
இதை கவனித்தாலே அவர் மகிழ்ச்சி , சோகம் ,பயம் , பொறாமை , வன்மம் ஆகிய குணங்களை கண்டறிய முடியும். மேலும் உடை , காலணி , வாட்ச் ஆகியவற்றை வைத்து அவரின் மதிப்பை உணர முடியும் , ஆனால் , இதில் கவனம் தேவை ,சில நேரம் அந்தஸ்து மிக்கவர்கள் சிலர் உடைகளில் கவனம் செலுத்துவது இல்லை.
2. மூளையின் திறனை அதிகரித்தல்:
உங்கள் மூளையில் உள்ள தேவையற்ற , அழுத்தம் கொடுக்கும் விஷயங்களை தூக்கி எறியுங்கள். தேவையான விஷயங்களை மட்டும் யோசியுங்கள். கூர்ந்து கவனிப்பதை தினமும் சில வாரங்கள் வரை பயிற்சி செய்யுங்கள்.
3. பேசும் போது கவனித்தல்:
ஒருவர் பேசும் பொது வரும் வார்த்தைகளின் வேகத்தை பாருங்கள். அவர் வேகமாக பேசினால் அவசரமாக வந்திருப்பார் , அதிகமாக வியர்த்து இருக்கும் , கைகளில் நிலையில்லாமல் ஆட்டி கொண்டிருப்பார். மகிழ்ச்சியாக இருப்பவர் உற்சாகமாக பேசுவார் , சற்று நிதானமாக இருப்பார். திறமையானவர் உங்களின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருப்பார். வன்மம் உள்ளவர் வார்த்தைகளில் மகிழ்ச்சி கலந்த பொறாமைகள் வெளிவரும்.
4. தீர்மானம் செய்ய முயலுங்கள்:
ஒருவரின் தலைமுடி அதிகமாக டிரீம் செய்யப்பட்டு , தாடி இல்லாமல் , மீசை மட்டும் இருக்கிறதா? ஆள் விரைப்பாக தீர்க்கமாக பார்க்கிறாரா? அவர் போலீஸாக இருக்க வாய்ப்பு அதிகம். அதே அவர் இன்னும் உயரமாக , இன்னும் முடி குறைவாக இருந்தால் இராணுவ வீரராக இருக்கலாம். ஒருவர் வெயிலில் அதிகம் முகம் காட்டாமல் புத்துணர்ச்சியாகவும் கைகள் அடிக்கடி கழுவி சிவப்பாக இருந்தால், அவர் மருத்துவர் அல்லது அது சார்ந்தவர் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
5. நினைவாற்றல் திறனை மேம்படுத்துவது:
ஒவ்வொரு செயலையும் ஒரு முறை நடப்பது போல கற்பனை செய்யுங்கள். இன்று முடி வெட்ட வேண்டும் என்றால் , கண்ணாடியில் நின்று முடி வெட்டுபவர் வெட்டுவதை போல நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த விஷயம் நினைவில் இருக்கும். மேற்கூறிய விஷயங்களை எல்லாம் சில வாரங்கள் கடைப் பிடித்தாலே உங்களின் கவனம் மேம்பட்டு செய்யும் செயல்களில் வெற்றி பெற உதவியாக இருக்கும்.