"The Boys" தொடர் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கை பாடங்கள்! 

The Boys
The Boys
Published on

“The Boys”, Amazon Prime Video-வில் ஒளிபரப்பாகும் ஒரு சூப்பர் ஹீரோ சீரிஸ். விமர்சன ரீதியாக எல்லாவிதமான ரசிகர்களையும் இது கவர்ந்துள்ளது. சூப்பர் ஹீரோக்களை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்த சீரிஸ் நம்மை சிந்திக்க வைக்கிறது. இந்தப் பதிவில் The Boys தொடரில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய சில முக்கிய வாழ்க்கைப் பாடங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

நம்பிக்கையின் முக்கியத்துவம்: The Boys சீரியஸின் முக்கிய கதாபாத்திரமான Billy Butcher, தனது மனைவி Rebecca Butcher-ன் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன், Homelander என்ற சூப்பர் ஹீரோவை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். Billy Butcher-ன் தைரியம் மற்றும் உறுதித்தன்மை, “சூப்பர் ஹீரோவாக இருந்தால் என்ன? நம்மால் அவரை அழிக்க முடியும்” என்ற நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. 

துணிச்சலின் தேவை: Hughie Campbell என்பவர் Homelander-ன் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க பட்சரின் குழுவில் சேருகிறார். இவர் ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் தவறு எனும் விஷயங்களை எதிர்த்து போராட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இந்த கதாபாத்திரம் நமக்கு உணர்த்துகிறது. 

நண்பர்களின் முக்கியத்துவம்: நமது வாழ்க்கையில் நண்பர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை, இந்த சீரிஸ் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும். Butcher, Hughie, Frenchie, Mother's Milk, Kimiko, Starlight போன்றவர்களின் நட்பு, எதிர்காலத்தில் எத்தனை சவால்கள் வந்தாலும் நண்பர்களின் துணையுடன் அவற்றை எதிர்கொள்ள முடியும் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது. 

சரியானதை செய்வது: Starlight என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் Homelander-ன் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து போகாமல், தனது திறமைகளை நம்பி நியாயத்தின் பக்கம் நின்று, செயல்படுவது உண்மையிலேயே நம்மை ரசிக்க வைக்கிறது. இது எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

இதையும் படியுங்கள்:
சர்க்காடியன் தாளங்களைப் புரிந்து நடந்தால் பல உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம்!
The Boys

விடாமுயற்சி: The Boys கதாபாத்திரங்கள் பல சவால்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டாலும் அவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுகின்றனர். இத்தகைய பின்னாடிவுகள் ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தோல்விகளில் இருந்து மீண்டு வந்து, தடைகளை எதிர்த்து உறுதியாக இருக்க கற்றுக் கொள்வது ஒருவரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவசியம். 

இந்தத் தொடர் ஒரு சூப்பர் ஹீரோ தொடர் மட்டுமல்ல, இது மனித இயல்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி. இந்த தொடரின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களை ஆழமாக ஆராய்வதன் மூலம் நமது சுய முன்னேற்றத்திற்கான பயணத்திற்கு தேவையான ஊக்கத்தை நாம் பெற முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com