நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்கிறீர்களா? போச்சு! 

Dangers of Multitasking
Dangers of Multitasking

இன்றைய உலகில் நம்மில் பெரும்பாலானவர்கள் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிக்கிறோம். படிக்கும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, புத்தகம் படித்துக் கொண்டே பாடல்கள் கேட்பது போன்று, ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்துவதை Multitasking என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது நமக்கு உதவுகிறதா? அல்லது நமது செயல்திறனை முற்றிலுமாக பாதிக்கிறதா? 

இந்தப் பதிவில் மல்டிடாஸ்கிங் செய்வதில் உள்ள ஆபத்துக்கள் மற்றும் ஒரு நேரத்தில் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் உள்ள நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

மல்டிடாஸ்கிங் செய்வதில் உள்ள ஆபத்துகள்? 

மல்டிடாஸ்கிங் செய்யும்போது நமது மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிக்கிறது. இது நமது கவனத்தை சிதறடித்து எந்த பணியையும் ஒழுங்காக செய்ய விடாமல் தவறுகளை இழைக்க வழிவகுக்கும். 

மல்டிடாஸ்க் நமது மூளையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கவலை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற மன அழுத்த அறிகுறிகள் ஏற்படும். 

ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்தும்போது, நாம் முக்கியமான தகவல்களை தவறவிடலாம் அல்லது முடிவுகளை மோசமாக எடுக்கும் வாய்ப்புள்ளது. 

மல்டிடாஸ்கிங் செய்யும்போது நாம் மற்றவர்களுடன் கவனம் செலுத்துவது குறைவாக இருக்கும். இது பிறர் நம்மை தவறாக புரிந்துகொண்டு உறவை பலவீனமாக்கும். 

சாலைகளில் வாகனம் ஓட்டும்போது அல்லது இயந்திரங்களை இயக்கும்போது மல்டி டாஸ்கிங் செய்வதால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு விபத்துக்கள் மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கும். 

ஒரு நேரத்தில் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் உள்ள நன்மைகள்: 

ஒரு நேரத்தில் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி செயல்படும்போது நாம் அந்த வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். இது நமது செயல்திறனை மேம்படுத்தி தவறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் இப்படி செய்வதால் நமது மூளைக்கு அழுத்தம் குறைந்து, மன அழுத்தம், பதட்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கிறது. 

ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தி செய்யும்போது, அந்த வேலையில் உள்ள எல்லா தகவல்களையும் முறையாக பரிசீலித்து சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும். மேலும், மனிதர்களுடனான தொடர்பு, ஒருமித்த கவனத்துடன் இருப்பதால் மேம்படும். 

இதையும் படியுங்கள்:
வெறித்தனமாக வேலை செய்யும் நபர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
Dangers of Multitasking

மல்டிடாஸ்கிங் செய்வதால் நினைவாற்றல் குறைகிறது. ஆனால், ஒரே வேலையில் கவனம் செலுத்தி செயல்படும்போது புதிய தகவல்களை நாம் சிறப்பாக கற்றுக்கொண்டு அதை நினைவில் கொள்ள முடியும். மேலும் ஒரு நேரத்தில் ஒரே வேலையை செய்வதால் புதிய யோசனைகள் உருவாகி, சிக்கல்களை விரைவாக தீர்க்க முடியும். 

ஒரு நேரத்தில் ஒரே வேலையில் கவனம் செலுத்துவது ஒரு எளிய பழக்கமாகும். எனவே அதன் நன்மைகளைப் புரிந்துகொண்டு, மல்டிடாஸ்கிங் செய்வதை இன்றுடன் கைவிடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com