

Shawshank Redemption என்னும் அருமையான படம் 31 வருடத்திற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படம் தான் தற்போது வரை IMDB Rankingல் முதல் இடத்தில் உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படி இந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த கதையின் கதாநாயகனின் பெயர் Andy. இவர் வங்கியில் முக்கியமான பணியில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர் செய்யாத ஒரு தவறுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து கடுமையான ஜெயிலுக்கு இவரை அனுப்பி விடுவார்கள். அதுவரை வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் பார்க்காத இவர் அந்த ஜெயிலில் நிறைய கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிப்பார்.
இப்படியே 20 வருடம் கடந்து போகிறது. இத்தனை வருடங்களில் Andy க்கு சொந்தமான நிறைய விஷயங்களை அந்த ஜெயில் பறித்துக் கொண்டாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவரிடமிருந்து அந்த ஜெயிலால் பறிக்க முடியவில்லை. அதுதான் அவருடைய நம்பிக்கை. சொல்லப்போனால், அந்த நம்பிக்கையை வைத்து தான் அந்த சிறைசாலையில் ஒரு நல்ல நட்பை உருவாக்கியிருப்பார். ஒரு பெரிய லைப்ரரியை கட்டி நிறைய பேருக்கு கல்வியை சொல்லிக் கொடுத்திருப்பார்.
அதே நம்பிக்கையை வைத்து தான் கடைசியாக அந்த ஜெயிலை விட்டும் தப்பிப்பார். ஆம். கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒரு சின்ன சுத்தியலை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை போட்டு யாருக்கும் தெரியாத மாதிரி அந்த ஜெயிலை விட்டு தப்பித்திருப்பார். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்பிக்கை தான் வாழ்க்கை.
Andy அந்த ஜெயிலுக்கு வரும் போதே இங்கிருந்து ஒருநாள் கண்டிப்பாக தப்பித்து விடலாம் என்று நம்பினார். அதற்காக மிகவும் பொறுமையாக காத்திருந்திருப்பார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. படத்தினுடைய கிளைமேக்ஸில் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை தன்னுடைய 50 ஆவது வயதிலிருந்து வாழ ஆரம்பிப்பார்.
இந்த படம் Amazon prime, Netflix போன்ற OTT தளங்களில் இருக்கிறது. நீங்களும் கண்டு மகிழுங்கள். இறுதியாக, இந்த கதையின் கதாநாயகன் Andy கூறிய பிரபலமான டயலாக். "நம்பிக்கை ஒரு நல்ல விஷயம், ஒருவேளை சிறந்த விஷயமாக இருக்கலாம்; எந்த நல்ல விஷயமும் ஒருபோதும் இறக்காது."