The Good girl syndrome: அனைத்துப் பெண்களுக்கும் இருக்கும் ஒரு சிண்ட்ரோம்!

Good girl Syndrome
Good girl Syndrome
Published on

ஒவ்வோரு மனிதனும் தெரிந்தும் தெரியாமலும் சில விஷயங்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அது பாதிப்பே என்று தெரியாமல் இருப்பவர்களும் உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு பெண்களும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

சிலருக்கு இது ஒரு சிண்ட்ரோம் என்றே தெரியாமல் இருப்பார்கள். அப்படி தெரியாதவர்கள், முதலில் இதனைப் படித்துவிட்டு நீங்கள் இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்க கூடாது. நல்ல பெண்ணாக இருந்தால் மட்டும்தான் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார், நல்ல குடும்பம் கிடைக்கும், இப்படி உடை அணிதல் கூடாது, வெளியே செல்ல கூடாது என சொல்லி சொல்லி வளர்ப்பார்கள்.

எது நல்லது எது கெட்டது, எதை ஏற்றுக்கொள்வது, கூடாது என்று தெரியாத அந்த வயதில், அவர்கள் கூறியதையே நாம் செய்ய ஆரம்பிப்போம். பிற்பாடு நம்மை அறியாமலையே அதை பற்றி தனக்குள் ஆலோசிக்காமல், அவர்கள் சொல்வதை மட்டுமே செய்வோம். இதனால் நம்முடைய சந்தோசம் மற்றும் சுதந்திரம் என்ற சாவிகள், அவர்கள் கைகளுக்குச் சென்றுவிடுகிறது.

மேலும் அவமரியாதை செய்தால், அதனை ஏற்றுக்கொள்வீர்கள், கோவம் வந்தால் தாங்கிக்கொள்வீர்கள். இதன்பின்னர் மற்றவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்திலேயே நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று முயற்சிப்பீர்கள். இதுதான் Good Girl Syndrome.

இப்படி உங்களுக்குள் தினிக்கப்பட்ட விஷயங்களால் உங்களை கட்டமைத்துக்கொள்வீர்கள். இதிலிருந்து உடனடியாகவும் வெளிவர முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.

இந்த சிண்ட்ரோமிலிருந்து வெளிவர வேண்டுமென்றால், முதலில் உங்களைப் புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, உங்களுக்கு எது செய்ய பிடித்திருக்கிறது, எது பிடிக்கவில்லை என்பதிலிருந்து நீங்கள் யார் என்பதுவரை புரிந்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கு நீங்களே இரு கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றியோ தோல்வியோ தேர்ந்தெடுப்பது நீங்கள்தான்!
Good girl Syndrome

1.  உங்களுக்கு உண்மையில் என்ன தேவை அல்லது வேண்டும்? என்ன வேண்டாம்?

2.  எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன் உள்ளதா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் திடமான பதில் கிடைத்தால் மட்டுமே இந்த சிண்ட்ரோமிலிருந்து வெளிவர முடியும்.

சிறு வயதிலிருந்து பழக்கப்பட்ட ஒரு விஷயத்திலிருந்து வெளிவருவது கடினம்தான். ஒரு புதுவகையாகத்தான் இருக்கும். ஆனால், பழகினால் அனைத்தும் எளிதே.

இப்போது கூறுங்கள்! இந்த Good Girl Syndrome – ஆல் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா??

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com