அறியாமையால் நாம் இடும் முடிச்சு சிக்கலைத்தான் தரும்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

னிதனாய்ப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் சிக்கல்கள், குழப்பங்கள், பிரச்சனைகள் என்று ஏதாவது இருக்கத்தான் செய்யும். சிக்கல்கள் இல்லாவிடில் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. ஆனால் நாம் என்ன செய்கிறோம், குழப்பங்களைக் கண்டு சிக்கல்களை பார்த்து அஞ்சி விடுகிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது.

வாழ்க்கையை நல்லவிதமாகக் கடக்கத் தெரியாமல் சிக்கல்களிலிருந்து விடுபடத் தெரியாமல், மேலும் பல முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு ஆசை என்னும் அரக்கனிடம் அடிமைப்பட்டு இருக்கிறோம். உங்கள் சிக்கல்களை எளிதாக எடுக்க இதோ புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இந்தப் பதிவில்... படியுங்கள்.

உபதேசத்துக்காக விடியற்காலை வந்த புத்தர் தனது சீடர்கள் முன்னால் கையில் ஒரு சிறு துணியுடன் வந்து அமர்ந்தார். எதுவும் பேசாமல் அத்துணியில் ஜந்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு இருந்தார்.

சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர். ஐந்து முடிச்சுகளைப் போட்ட பின்பு பேசத் தொடங்கினார் புத்தர்.

"நான் ஐந்து முடிச்சுகள் போட்டுள்ளேன். இதை அவிழ்க்கப் போகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன் என்றார்.

இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி. முன்பு இருந்த துணி தானா? அல்லது வேறு துணியா?"

ஆனந்தா என்னும் சீடர் எழுந்து,  ‘’ஒருவகையில் எல்லாமே ஒன்று தான். முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றேதான்.

முடிச்சுகளில் மட்டுமே வேறுபாடு ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது அவ்வளவே... முன்பு இருந்த துணி சுதந்திரமானது. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய் விட்டது. இப்போது உள்ள துணி அடிமையாகி இருக்கிறது..’’ என்றார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில், ஒன்று சேராத ஆறுகளின் சங்கமம் எங்கு ஏற்படுகிறது தெரியுமா?
Motivation image

அதற்குப் புத்தர், ஆம் ஆனந்தா நீ சொன்னது சரியே. ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது. எல்லோரும் இயல்பில் சுதந்திரமானவர்கள்தான்..!

முடிச்சுப் போட்டுக் கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர். அதனால் தனித்தனி உலகங்களாகவே மாறிப்போய் விடுகின்றர்.

சரி எனது அடுத்தக் கேள்வி…

இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்..?

சாரி என்னும் சீடர் எழுந்தார்.

குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்க வேண்டும். முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளது என்று அறியாதவரை அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை.

முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும். நெருங்கிப் பார்த்து அறியாமல் எதுவும் செய்ய இயலாது.

நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும். நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலான வையே. சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய் விடும் என்றார்.

அதற்கு புத்தர்,

“சாரி.. நீ மிகவும் சரியாகச் சொன்னாய். அது தான் வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்“ என்றார் புத்தர்.

நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம் தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம். ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வைச் செதுக்கிக் கொள்ளும் உளிகள் நாம். சிக்கலின்றி சுதந்திரமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com