வெளிச்சப் புன்னகை செய்யும் மாயமும், அது தரும் வெற்றியும்!

Motivation Image
Motivation Imagepixabay.com

"It was only a sunny smile, and little it cost in the giving, but like morning light it scattered the night and made the day worth living."  - F. Scott Fitzgerald

ருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அமெரிக்க  எழுத்தாளர் சொன்ன இதைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நமக்கு என்றும் வெற்றிதான். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்பு என்பதை அறிவோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சிரிப்பதற்கு நேரம் உள்ளது?

பள்ளி செல்லும் குழந்தை முதல் அலுவல் செல்லும் பெற்றோர், ஓய்வில் இருக்கும் முதியோர் வரை தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அநேகம். குழந்தைக்கு மிஸ் ஸ்டார் போடவில்லை எனும் ஏமாற்றம், தந்தைக்கு எதிர்பார்த்த இன்கிரிமெண்ட் வரவில்லை எனும் கவலை, பாட்டிக்கு தினம் ஒரே மாதிரி சீரியல் பார்த்து போரடிக்கிறதே எனும் விரக்தி. இப்படி அவரவர் சூழலுக்கேற்ப பிரச்சினைகளை சுமந்து அனைவரும் வீட்டுக்கு வந்து இரவு உணவை ஒன்றாக அருந்து கின்றனர்.

அப்போது அந்த வீட்டின் இல்லத்தரசியான பெண் அவரவருக்குத் தேவையான உணவைப் பரிமாறி விட்டு அனைவரையும் ஒன்று சேர்க்கிறார். சோர்ந்த மனதுடன் இருந்த அவர்களைப் பார்த்து அன்று நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றைச் சொல்லி சிரிக்கிறார். அவருடன் சேர்ந்து மற்றவர்களும் மனம் விட்டு சிரித்து பின் உறங்க செல்கின்றனர். அன்றைய பொழுதின் கவலைகளை வெளிச்சப் புன்னகையில் கரைத்து விட்டு அடுத்த நாளை வெற்றி தரும் உற்சாகத்துடன் துவங்குகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இனி இன்ஸ்டாவில் மற்றவர் ப்ரொபைலை ஸ்டோரியா வைக்கலாம்.. எப்படி?
Motivation Image

காலை எழும்போது முந்தைய நாளின் அனுபவங்களை மறந்து விட்டு புன்னகையுடன் நாளைத் துவங்குங்கள். அந்த நாள் நிறைவதற்குள் நீங்கள் நினைப்பது நடக்கலாம். அல்லது அதற்கு மேலும் வெற்றி கிடைக்கலாம். நீங்கள் சிந்தும் புன்னகை வெளிச்சம் உங்களுக்கு மட்டுமல்ல  உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் பாஸிடிவ் எனர்ஜி தந்து அவர்கள் பிரச்சினை தீர உதவுகிறது.

விலை தந்து வாங்க முடியாத நேரங்களை விலையின்றி தரும் புன்னகயால் ஒளிரச் செய்து வெற்றிகரமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com