The Paradox of Choice: அதிகம் இருந்தாலே ஆபத்து!

The Paradox of Choice
The Paradox of Choice

இன்றைய நவீன உலகில் அதிகப்படியான Choice-களுக்கு மத்தியில் நாம் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். படம் பார்க்க வேண்டுமா? Netflix, Hotstar, Amazon prime போன்ற பல OTT தளங்கள் உள்ளது. பசி எடுக்கிறதா? இருக்கிறது Swiggy, Zomato, Uber eats. திருமணத்திற்கு வரன் பார்க்க வேண்டுமா? ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தளங்களுக்குச் சென்று வேண்டிய வரனை தேர்வு செய்யலாம். இப்படி நம்மைச் சுற்றி அதிகப்படியான தேர்வுகளைக் கொடுத்து நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது இந்த உலகம். 

இத்தகைய அதிகப்படியான தேர்வுகள் நம்முடைய முடிவுகளை கடினமாக்குகிறது. எது நன்றாக இருக்கும்? எதை நம்புவது? எதை தேர்வு செய்வது? என்ற குழப்பம் நம்மை எதையுமே முடிவெடுக்க முடியாமல் முடக்கிவிடும். இதைத்தான் The Paradox of Choice என்பார்கள். 

The Jam Experiment:

இதை நிரூபிப்பதற்கு அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட The Jam Experiment-ல், முதலில் ஒரு கடையில் 24 வகையான ஜாம்கள் விற்பனைக்கு வைத்து பொதுமக்களை அதை வாங்க வைத்தனர். இரண்டாவது அதே கடையில் வெறும் 6 வகையான ஜாம் பாட்டில்கள் மட்டுமே வைத்து பொதுமக்களை வாங்க வைத்தனர்.  

முதலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட 24 வகையான ஜாம்கள் 60% மக்களை அதன் பக்கம் ஈர்த்தது. ஆனால் அதில் வெறும் 3 சதவீத மக்கள் மட்டுமே ஜாம் வாங்கினார்கள். மறுபுறம் 6 வகையான ஜாம் பாட்டில்கள் வைத்த இடத்தை நோக்கி வெறும் 40% மக்கள் மட்டுமே ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அதில் 30 சதவீதத்தினர் ஜாம் பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 

என்னதான், அதிகப்படியான நபர்கள் 24 வகைகள் இருக்கும் ஜாம் பாட்டில்களை நோக்கி ஈர்க்கப்பட்டாலும், அவற்றை தேர்வு செய்து வாங்கியவர்களின் சதவீதம் குறைவாகவே இருந்தது. இப்படிதான், அதிகப்படியான தேர்வு இருக்கும் இடத்தில் மக்கள் எதைத் தேர்வு செய்வது என்பதில் கஷ்டப்படுவதை உறுதி செய்தது இந்த ஆய்வு. 

இதையும் படியுங்கள்:
ஆதிக்க மனப்பான்மை வளர்வது எப்படி? விளக்கும் The Stanford Prison Experiment!
The Paradox of Choice

இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டு, எது அதிகமாக இருக்கிறதோ அந்த பக்கம் செல்லாமல், குறைவாக இருந்தாலும் அது உங்களின் தேவையை பூர்த்தி செய்தால், அவற்றைத் தேர்வு செய்வது நல்லது. எனவே உங்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் குறைந்த பொருட்களையும், குறைந்த நபர்களையும், குறைந்த தேர்வுகளையுமே வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக சரியான ஒன்றைத் தேர்வு செய்து, நிம்மதியாக வாழ முடியும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com