The Paradox of Fear: பயம் என்ன செய்யும் தெரியுமா? 

Fear Face
The Paradox of Fear.
Published on

பயம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த உணர்ச்சியாகும். அது நமக்கு உந்துதலை ஏற்படுத்தி, வாழ்க்கையில் முன்னோக்கியும் செல்ல வைக்கும், அதேசமயம், பயம் காரணமாக எதையும் முயற்சிக்காமல் வாழ்க்கையை மோசமாகவும் மாற்றும். இந்த பதிவில் மிகவும் பிரபலமான The Paradox Of Fear என்கிற முரண்பாடு பற்றி முழுவதும் தெரிந்துகொண்டு, வாழ்க்கையை வழிநடத்திட பயத்தை எப்படி கையாள்வது எனத் தெரிந்து கொள்வோம். 

பயம் என்னும் இருமுகன் 

நன்மை: பயம் என்பது ஒரு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருக்க முடியும். தோல்வி, நிராகரிப்பு மற்றும் வாய்ப்புகளை தவற விட்டு விடுவோமோ என்ற எண்ணம், ஒருவனை மேம்படுத்தவும், வெற்றிக்காக ஏதோ ஒன்றை முயற்சிக்கவும் தூண்டுதலை ஏற்படுத்தும். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, தைரியமாக சில விஷயங்களை முயற்சிக்கும் தூண்டுதலை ஏற்படுத்தலாம். 

தீமை: மறுபுறம் அதிகப்படியான பயம் நம்மை முடக்கிவிடும். ஒருவன் எல்லா விஷயங்களுக்கும் அதிகமாக பயந்தால், அந்த பயமே அவனது முன்னேற்றத்தைத் தடுத்துவிடும். எதையாவது முயற்சித்தால் தவறாகிவிடுமோ என்ற பயத்தில் அனைத்தையும் செய்யத் தயங்குவார்கள் சிலர். இதுவே அவர்களை எப்போதும் ஒரே வட்டத்திலேயே இருக்க வைத்துவிடும். தோல்வி பயம், நமது கனவுகளைத் தொடர்வதைத் தடுக்கலாம். இதன் மூலமாக வாழ்க்கை மிக மோசமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. 

பயத்தை எப்படி கையாள்வது: 

முதலில் நீங்கள் எதனால் பயப்படுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த பயம் உங்களை எதிர்காலத்தில் எப்படி மாற்றும் என சிந்திக்க வேண்டும். நிச்சயமாக தோல்வி பயம் உங்களை ஒருபோதும் முன்னேற்றாது. அதேநேரம் தவறான விஷயங்கள் செய்யக்கூடாது என்ற பயம், உங்கள் வாழ்வில் நல்ல விஷயங்களைக் கொண்டு வரும். எனவே பயத்தைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். 

நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், அதை ஒரு சிக்னலாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பயம் என்னிடம் என்ன சொல்ல முயற்சிக்கிறது? என உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். என்னை சிறப்பாக தயார் செய்ய எச்சரிக்கிறதா, அல்லது தேவையில்லாமல் எனது முயற்சிகளை தடுக்கிறதா? என பயத்தை சரியான முடிவெடுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை ஒருபோதும் உங்க குழந்தைகளுக்குக் கொடுத்துடாதீங்க! 
Fear Face

நீங்கள் பயப்படும் விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுங்கள். நீங்கள் பயந்து ஒதுக்கும் விஷயங்களே பல தருணங்களில் உங்களது முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும். எனவே தைரியமாக நீங்கள் பயப்படும் விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். 

கமல் சொல்வது போல, “வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறதுதான்”. இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டாலே, வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் நீங்கள் தைரியமாக செய்யலாம். இது உங்களை நிச்சயம் வெற்றியாளனாக மாற்றும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com