ரொம்ப சிம்பிள் வெற்றியின் சூட்சமம் இந்த 7ல் உள்ளது!

ரொம்ப சிம்பிள் வெற்றியின் சூட்சமம் இந்த 7ல் உள்ளது!

ல்லோருக்கும் பிடிக்கும் ஒரே வார்த்தை வெற்றி. யாருக்கு தான் பிடிக்காது ஆனால் அந்த வெற்றியை அடைய நாம் சில சமயங்களில் சரியான முயற்சிகள் மேற்கொள் வதில்லை. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்து வெற்றி பெற்று விடலாம் என்றால் எப்படி அந்த குறிப்பிட்ட இலக்கை அடைவது என்றெல்லாம் உங்கள் மனதில் என்னோட்டம் ஓடும்.... ரொம்ப சிம்பிள் வெற்றியின் சூட்சமம் இந்த 7ல் உள்ளது.

1. நீங்களே இலக்குகளை தீர்மானியுங்கள்

குறிப்பிட்ட இலக்குகளை வைப்பதன் மூலம்,  உண்மையில் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். இலக்குகள் இல்லாவிடில் உங்களால் வெற்றியை அடைய இயலாது. இதற்கு சிறந்த உதாரணம் நீங்கள் ஒரு பந்தயத்தில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், ஆனால் இறுதி இடம் எங்கே என்று உங்களுக்குத் தெரியாது, அப்படி இருக்க உங்களால் அந்த போட்டியில்  வெற்றி பெற முடியுமா? உங்களால் வெற்றிபெற இயலாது. அதனால்தான் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு தேவை, நீங்கள் எந்த திசையில் செல்கிறீர்கள், உங்களின் இலக்கு எங்கே உள்ளது  என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


2. உங்களின் செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு 

ங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க கற்றுக்கொள்ள வேண்டும்.  உங்கள் தவறுகளுக்கு நீங்கள் மற்றவர்களைக் குறை கூறக் கூடாது, நீங்கள் சாக்குகளை பயன்படுத்த கூடாது. வெற்றியாளர்கள் தங்கள் சொந்த தவறுகளைப் பற்றி சுய விழிப்புணர்வு கொண்டவர்கள், அவர்களின் விருப்பங்களும் முடிவுகளும் தான் அவர்களை அங்கு அழைத்து வந்தன என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். வெற்றியாளர்கள் சாக்குகளைப் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாறாக அவர்கள் தீர்வுகளைக் காண்கிறார்கள்.


3. வெற்றாயாளர்களின் பழக்கம்

ங்களின் மனதில் அனைத்தையும்  வெல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள், ஆம்  நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் ஒரு வெற்றி பழக்கத்தை உருவாக்க வேண்டும், இந்த  பழக்கங்களை வளர்ப்பது கடினம். ஒரு வெற்றி பழக்கத்தை உருவாக்க, நீங்கள் ஒவ்வொரு  விஷயங்களையும்  வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்க வேண்டும், அவற்றை சவால்கள் போல் பார்க்க வேண்டும். உங்களுக்கு  முன்பு தெரியாத விடயம்  ஒன்றை தினமும் செய்யக்கூடிய  பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது தினமும் புதிதாக ஒரு விடயத்தை கற்றுகொள்ளுங்கள். இதுதான் வெற்றாளர்களின் பழக்கங்களாக கருதப்படுகிறது.


4. தோல்வியை கண்டு ஏன் அஞ்சனும்

நீங்கள் தோல்வியை கண்டு  பயப்படக்கூடாது,  அதற்கு பதிலாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தோல்விகளை ஒரு பாடமாக ஏற்க கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வி உங்களின் வாழ்க்கையை  நிலைகுலைய வைக்கும் அளவிற்கு  விடக்கூடாது, அந்த தோல்விகள்தான்  நீங்கள் சிறந்ததைப் பெற வழிகாட்டியாக அமையும் , அதுதான்வாழ்க்கைகான  பாடம், அடுத்த முறை நீங்கள் வெற்றிபெற உதவும் வழிகாட்டியாக அந்தப் பாடத்தைப் பயன்படுத்த வேண்டும்.


5. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்

வ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது புதியதாக செய்யவும். ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


6. துணிந்து செய்யுங்கள் 

ரிஸ்க் எடுக்க பயப்பட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருந்தால், நீங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும், மேலும் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே துணிந்து செய்யவும்.


7. கவனம் தான் மிக முக்கியம்

ங்களின் இலக்கை நோக்கி கவனத்தை வைத்திருப்பது முக்கியம். சோர்வடைய வேண்டாம், எப்போதும் உங்கள் மனதை  இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் செயல்களை  தீவிரமாக செய்ய மாட்டீர்கள்! தீவிரமாக செய்யவில்லை என்றால், நீங்கள் வெற்றியாளராக மாற முடியாது.


வாழ்க்கையில் வெற்றிபெற இந்த வழிகள் மட்டுமல்லாமல் நிறைய வழிகள் உள்ளன அவையெல்லாம் ஒவ்வொரு தனி நபரை பொருத்து மாறுபடும். எனவே வெற்றிக்கான பாதையில் உங்களின் பயணத்தை தொடங்குங்கள் சில காலங்கள் ஆனாலும் வெற்றி என்பது அனைவருக்கும் கிட்டும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com