பேசும் வார்த்தைக்கும் சக்தி உண்டு!

Motivation Image
Motivation Image
Published on

ம் அன்றாட வாழ்வில் தினம் தினம் பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு என்பது தெரியுமா? கோபமாக பேசி சாபமிட்டாலும் சரி. இல்லை மகிழ்ச்சிப் பெருக்கில் சொல்லும் வார்த்தைகளும் சரி. அப்படியே பழிக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளது.

இரண்டு செடிகளை வைத்து நடத்திய ஒரு ஆய்வில் நடந்த விஷயங்களை பார்க்கலாம்,

இரண்டு செடிகளை வாங்கி கொள்ளுங்கள். அதில் முதலாவது செடிக்கு நன்றாக தண்ணீர் விட்டு, உரம் போட்டு பின்பு கனிவான சொற்களில் அந்த செடியிடம் பேசவும்.

இப்போது இரண்டாவது செடியை எடுத்துக் கொள்ளவும். அதற்கும் நன்றாக தண்ணீர் விடவும், உரம் போடவும். ஆனால் அதை மட்டும் கடுமையான சொற்களால் திட்டவும்.

இப்படி இரண்டு செடிகளுக்கும் தினமும் செய்யவும். இப்படியே ஒரு வாரம் செய்து பாருங்கள்.

அதில் கனிவான சொற்களை கேட்டு வளர்ந்த செடி நன்றாக செழிப்பாக வளரும். கடும் சொற்களை கேட்டு வளரும் செடி நாளடைவில் பட்டுப் போவதை கண் கூடாகக் காணலாம். இப்படி செடிகளும் சத்தத்தை வைத்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் என்று சில ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

செடிக்கே இப்படி என்றால் மனிதர்களின் மனதை எவ்வளவு மென்மையாக கையாள வேண்டும்.

இனிய சொற்களை கேட்பதனால் வரும் புத்துணர்ச்சி. கடும்சொற்களை கேட்கும் போது வரும் மனவாட்டம் முழுதாக ஒருவரை முடக்கிவிடும்.

அதனால் இனிமையான சொற்களையே மற்றவர்களிடம் பயன்படுத்துங்கள். இன்முகத்துடன் பேசுவதால் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.

ஒரு சின்ன புன்னகை ஒருவரின் நாளை மகிழ்ச்சியாக மாற்றக்கூடும். அதனால் இனிமையாக பேசுவதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

முகம் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு போங்கள். அப்படி உதிர்க்கும் புன்னகை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் சக்தி படைத்தது.

இதையும் படியுங்கள்:
எதிலும் தெளிவு இல்லையென்றால் என்ன செய்வது? 
Motivation Image

எந்த செயலை செய்ய ஆரமிக்கும் போதும் ஒரு புன்னகையுடன் ஆரம்பியுங்கள். பாஸிட்டிவான எண்ணத்துடன் தொடங்கும் எந்த செயலுமே 50% முடிந்ததற்கு சமம். மீதி உழைப்பு 50% இருந்தாலும் ஒரு செயலின் தொடக்கம் பாஸிட்டிவாக இருப்பது மிகவும் முக்கியம்.

எனவே வார்த்தை, செயல், எண்ணம் போன்றவை இயற்கையோடு ஒன்றிணைந்திருப்பது அதனால் அதற்கும் சக்தி உண்டு. முழுமையாக ஒரு விஷயம் நடக்கும் என்று நினைத்து செயல்படுவது நிச்சயம் நடக்கும். அதில் சிறிது பாஸிட்டிவிட்டியும் சேர்த்துக்கொள்ளுங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com