

சாக்ரடா ஃபேமிலியா என்பது ஸ்பெயினின் பார்சிலோனாவின் எக்ஸாம்பிள் மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தேவாலயம். இது தான் உலகின் மிக உயரமான தேவாலயம் என்ற பெருமையைப் பெற்றது. அன்மையில் இதன் மைய கோபுரத்தின் மீது 7.25 மீ உயர சிலுவை நிறுவப்பட்டதையடுத்து தற்போது இதுதான் உலகின் மிக உயரமான தேவாலயம். சாக்ரடா ஃபேமிலியா என்றால் "புனித குடும்ப தேவாலயம்" என்று பொருள். களிமண்ணை கையால் பிசைந்து கட்டியதுபோல இந்த தேவாலயம் காட்சியளிக்கும்.
மிகப்பெரிய முடிக்கப்படாத இந்த கத்தோலிக்க சர்ச் தற்போது 162.91 மீட்டர் உயரம் கொண்ட ஸ்பானிஷ் பசிலிக்கா, 1890 முதல் உலகின் உயரமான தேவாலயம் என்ற கிரீடத்தை வைத்திருந்த ஜெர்மனியின் உல்ம் மினிஸ்டரின் சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது. இதன் முழு கட்டிடமும் வேலை முடிந்த பின்னர் அதன் உயரம் 172 மீட்டர் இருக்கும் என்கிறார்கள்.
புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் அன்டோனி கௌடி வடிவமைத்த இந்த வழிபாட்டுத் தலம் பார்சிலோனாவின் மையத்தில் 1882 ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து இன்னும் முழுமையாகாமல் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கட்டுமானத்தில் உள்ளது, சாக்ரடா ஃபேமிலியாவின் முழுமையடையாத நிலைக்கு வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், நிதி சவால்கள் மற்றும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற வெளிப்புற நிகழ்வுகள் உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும்,சாக்ரடா ஃபேமிலியா, ஸ்பெயினின் பார்சிலோனாவின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
பிரதான கட்டிடம் அடுத்த ஆண்டு இதன் கட்டிட கலைஞரின் நூற்றாண்டின் நினைவு நாளில் நிறைவடைய உள்ளது. இது யுனெஸ்கோவின் புராதான சின்னங்கள் உள்ள இடத்தில் உள்ளது. எனவே அந்த இடத்தில் தேவாலயம் எழுப்ப அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால் கடந்த சில ஆண்டுகளாக 41 மில்லியன் டாலர்கள் வரை அரசுக்கு அபராதம் செலுத்தி உள்ளது அந்த சர்ச் நிர்வாகம்.
137 வருடங்களாக கட்டிட அனுமதி இல்லாமல் இருந்த இந்த ரோமன் கத்தோலிக்க சர்ச்க்கு ஒரு வழியாக 2019 ம் ஆண்டு அந்த நாட்டின் அரசு கட்டடம் கட்டி முடிக்க அனுமதி வழங்கியது. 2026 ம் ஆண்டு கட்டடம் முழுவதும் கட்டி முடிக்க உத்தேசித்து உள்ளனர். இருப்பினும் இந்த பிரம்மாண்ட உயரமான தேவாலயத்தைகாண வருடம் தோறும் 20 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாக சாக்ரடா ஃபேமிலியா உள்ளது. கௌடி வடிவமைத்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கட்டுமானத்தில் உள்ள இந்த தலைசிறந்த படைப்பு, உள்ளே நுழையும் அனைவரின் கற்பனையையும் ஈர்க்கிறது. அதன் உயரமான கோபுரங்கள், சிக்கலான முகப்புகள் மற்றும் உயரும் உட்புற தூண்கள். ஒரு பரந்த கல் காடுபோல வடிவமைக்கப்பட்டவை - வேறு எதையும் போலல்லாமல் ஒரு ஆன்மீக மற்றும் கலை அனுபவத்தை உருவாக்குகின்றன.
பார்வையாளர்கள் பார்க்க விரும்பும் இதன் கோபுரங்களிலும் ஏறலாம், இது தவற விடக்கூடாத ஒரு சிறப்பம்சமாகும். லிஃப்ட் மற்றும் ஒரு குறுகிய சுழல் படிக்கட்டு வழியாக ஏறுவது, அதன் அனைத்து சிறப்பிலும் விரிவடையும் பரந்த மொட்டை மாடிகளுக்கு செல்ல வழிவகுக்கிறது. இங்கிருந்து, பார்சிலோனா எக்ஸாம்பிள் மாவட்டம் , மத்தியதரைக் கடல் மற்றும் இந்த துடிப்பான நகரத்தின் வியத்தகு காட்சிகளை நீங்கள் ரசிக்கலாம். ஒவ்வொரு கோபுரமும் ஒரு தனித்துவமான பார்வையை வழங்குகிறது.