வெற்றியைத் தீர்மானிக்கும் இரு பெரும் ஆயுதங்கள்: புன்னகையும் மௌனமும்!
லாபமோ நஷ்டமோ, எனது வாழ்க்கையை என்னால் பாா்த்துக்கொள்ளமுடியும், யாரும் என்னிடம் மோத முடியாது, நான் எதையும் சமாளித்துவிடுவேன், என்னிடம் பணபலம் உள்ளது, என் வசம் ஆட்கள் பலம் உள்ளது, இவையெல்லாம் பலரும் பலவிதமாக பேசுவது அன்றாட நிகழ்வு.
இது பல இடங்களில் சர்வசாதாரணமாக நிகழக்கூடிய விஷயம். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை என பலரும் நினைத்து வருகிறோம். அது நிரந்தரம் அல்ல.
இதனில் நம்மிடம் அனைத்தையும் வெல்லக்கூடிய சில ஆயுதங்கள் உள்ளன. அதாவது அன்பான சிாிப்பு. மற்றும், மெளனம், இவை இரண்டும் எவ்வளவு பொிய இலகுரக ஆயுதம் என்பதை உணருங்கள். அன்பகலாத சிாிப்பு அந்த நிலைபாடுகளால் பல காாியங்களை நிலைநிறுத்த இயலும்.
அதே நேரம் சில முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கோபதாபங்களை தவிா்த்து மெளனமாக இருந்து நல்ல பல காாியங்களை சாதித்துவிடலாமே! இந்தசூட்சமம் தொிந்து நாம் சாதுா்யமாய் செயல்படவேண்டும். சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
அதிக அழுத்தம் கொடுப்பதும் நமக்கு தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்திவிடு்மல்லவா? இதுதான் வாழ்க்கையின் சாராம்சம். நம்மிடம் பணம் பதவி இருந்தால் நம்மையே சுற்றிச்சுற்றி வரும் உறவு மற்றும் நட்புகள் நமது நிலையில் கொஞ்சம் தாழ்வான சூழல் வரும்போது அப்படியே விலகிவிடும் பாருங்கள் அதுதான் இன்றைய சூழல்.
ஆக, இதுபோன்ற பரமபத விளையாட்டில் நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பாம்பு இறக்கிவிடும். ஏனி ஏற்றிவிடும் அதுவிளையாட்டு என நினைத்தாலும் நிஜத்தில் ஆண்டவனின் கட்டளை என்றுதான் பொருள்படும்.
நிலைமாறும் உலகில் கழுதைபோல முன்பக்கம் போனால் கடிக்கிறது. பின்பக்கம் போனால் உதைக்கிற உலகமாகத்தான் இருக்கிறது.
மிகவும் நெருடலாக பழகும் நிலைக்கு நாம் நம்மை தயாா் படுத்திக்கொண்டு வாழவேண்டியுள்ளது. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசர கதியில் அள்ளித்தெளித்த கோலம் போல வாழ்க்கைச் சக்கரத்தை பயன்படுத்தக்கூடாது.
நிதானமும் சமயோஜித புத்தியும் வஞ்சகமில்லா பரந்த மனப்பான்மையும், அடுத்துக்கெடுக்காத குணமும் வேண்டும். நல்ல நெறிமுறைகளையும் நீதி தவறாத கொள்கையும் கொண்டு இறை உணர்வுடன் வாழ்வைத் தொடருங்கள் காலம் மாறிவிட்டது.
கலிகாலமாகிவிட்டது என்ற நினைப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாம் நமது கொள்கையிலிருந்து பிழராமல் வாழலாமல்லவா!

