
மனிதனுடைய அதிசய, அற்புத, அபார, அபூர்வ, ஆக்கபூர்வமிக்க ஆற்றலுக்கு அளவே கிடையாது. வாயுவின் வேகத்தை அளந்து விடமுடியும் ஆனால் மனித மனதினுடைய ஆற்றலின் வேகத்தை அளவிட முடியாது. மனிதனுடைய தொட்டு, சுவைத்து, முகர்ந்து, பார்த்து, கேட்டு உணரும் ஐந்து உணர்வுகளுக்கும் எல்லை உண்டு. காலம் உண்டு. உடலால் தொட்டுணர்வை உணரமுடியும், நாக்கில் பட்டால்தான் சுவைகளை உணரமுடியும், முகர்ந்தால்தான் மணத்தை உணரலாம். கேட்டு உணர்வதும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான், அதேபோல் கண்ணால் தூரத்தில் ஒரு பொருளை பார்க்க அது ஒரு புள்ளியாகத்தான் இருக்கும். அதேபோல் நம்காது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஒலிகளை தாங்க முடியாது.
ஆனால் ஆறாவது உணர்வாகிய பகுத்தறிவு உணர்வு நிறைந்திருக்கின்றன. அதிசய, ஆற்புத, அபூர்வ ஆற்றலுடைய மனிதனின் ஆற்றலுக்கு நீளம் இல்லை. அகலம் இல்லை. காலம். இல்லை. நேரமும் இல்லை. மனித மனம் எதையுமே எப்படி வேண்டுமானாலும் நினைக்க முடியும், பார்க்க முடியும். கேட்க முடியும். சுவைக்க முடியும். முகர முடியும். தொடமுடியும்.
மனிதனால் நிலத்தின் மீது நடக்க முடியும். நீரின் மேல் நடக்க முடியும். நிலத்திற்குள்ளும், பாதாளத்துக்குள்ளும் பிரயாணம் செய்ய முடியும். உலகலயே சுற்றிவர முடியும். விண்வெளி போய் வரமுடியும்.இப்படியே அடுக்கிக் கொண்டே போகமுடியும்.
இருப்பதை இல்லை என்று நம்ப வைக்க முடியும். இல்லாததை இருப்பதாக நம்ப வைக்கமுடியும். மனிதனால் மனதின் ஆற்றல் மூலமாக என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். மனித மனதால் கடந்த காலத்தை நிகழ் காலத்திற்குக் கொண்டுவர முடியும். நிகழ்காலத்தை எதிர்காலத்திற்கு கொண்டுவர முடியும். ஆற்றலை. மனிதனுக்கு இறைவன் கொடுத்ததற்குக் காரணம் ஆக்கபூர்வமான கார்யங்களை பூமியில் அவன் நடத்தவேண்டும் என்பதற்காகத்தான்.
அதனால் மனித மனத்திற்கும் கால நேரம் இல்லை. மனதின் வேகத்தை அளக்க கருவி இல்லை. இப்படிப்பட்ட ஆற்றலைக்கொண்டு மனிதன் இப்பூமியில் தானும் வாழ்ந்து மற்ற ஜீவராசிகளையும் காத்து அரிய அற்புத வாழ்நாட்களில முழுமையாக பயன்படுத்தி தானும் வாழ்ந்து அனைவரையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய ஆற்றலை இறைவன் அளித்திருக்கிறார்.
இதுவே இறைவனின் விருப்பம். இறைவனுடைய விருப்பத்தையும் கோரிக்கைகளை நிறைவேற்றவே மனிதனை தன் உடன் படைப்பாளன் ஆக உருவாக்கி வைத்திருக்கின்றார் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.