இந்த பத்தும் நம் மன அழுத்தத்தைக் குறைக்கும்!

Motivation Image
Motivation Imagepixabay.com
Published on

வ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும்போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும்.

ம் வீட்டில் உள்ள விலங்குகளுடன் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன.

நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும்போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டி.வி. நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

ரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ரேடியோவை ஆன் செய்து, அதோடு சேர்ந்து பிடித்தமான பாடலை வாய் விட்டு பாடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன், மன அழுத்தமும் குறையும்.

ன அழுத்தத்தை குறைக்க மிக முக்கியமான வழி உடற்பயிற்சி. இதன் மூலம் எண்டார்பின்கள் சுரந்து, புத்துணர்வை அளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான டிபன் பாக்ஸ் ரெசிபிகள்!
Motivation Image

யற்கையான சூழலுக்கு சென்று, ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் கலந்து, அமைதி கிடைக்க வழிவகுக்கும்.

ங்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து மெளனம் காத்து மூச்சை கவனித்து உங்களுக்கு பிடித்த தெய்வமோ அல்லது மந்திரத்தை நினைக்கும்போது மனம் அமைதியாகும்.

ங்களுக்கு பிடித்த விசயங்களை செய்து வாருங்கள். 
உங்களுக்கு பிடித்தவருடன் மனம் விட்டு பேசவும் மனம் அமைதி பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com