இந்த மூன்றும் போதுமே சாதிக்க..!

motivation image
motivation imagepixabay.com

விடாமுயற்சி, உடல் ஒத்துழைப்பு, திட்டமிடுதல் இந்த மூன்றையும் சரிவர செய்தால் நினைத்ததை சாதிக்கலாம். தொய்வில்லாமல் நினைத்ததை செய்து முடிக்கலாம்.

விடாமுயற்சி:

னக்குத் தெரிந்த ஒரு தோழி எந்த செயலை செய்தாலும் மிகவும் போராடித்தான் வெற்றி பெறுவாள். வெற்றி என்பது அவளுக்கு எட்டாக்கனி என்று கூறுவாள். அவள் ஏதாவது ஒரு செயலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாலும், ஒரு சமையலை வித்தியாசமாக செய்ய ஆரம்பித்தாலும், அதை யாரிடமாவது கற்றுக்கொள்ள விரும்பினாலும் கூட அவளை அவ்வீட்டில் உள்ளவர்கள் கிண்டல், கேலி செய்து தடுத்து நிறுத்த பார்ப்பார்கள். ஆனால் அவள் மாத்திரம் எதற்கும் சளைக்கவே மாட்டாள். எதையாவது புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருப்பாள்.

அவள் திருமணமாகி வெளிநாடு சென்ற பொழுது நிறைய நேரம் கிடைக்கவும், முயற்சிசெய்து கற்றுக் கொண்டவற்றை திருத்தமாக செய்து, மற்றவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதில் சம்பாதிக்க ஆரம்பித்தாள். அதனால் அவள் ஒவ்வொன்றிலும் நல்ல ஆசிரியையாக பரிணமித்தாள். எடுத்துக்காட்டாக ஒரு கேக் செய்வது என்றால் அதை எப்படி எல்லாம் செய்தால் நன்றாக வரும், எந்த தவறு செய்தால் சரியாக வராது. அந்த தவறை எப்படி திருத்துவது என்று பலமுறை செய்து பார்த்து, பழகிக் கொண்டதால், அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு சொல்லித் தர, அவளின் அந்த பண்பை விரும்பி விழைந்தவர்கள் அதிகம். ஆதலால் திறமை சாலிகள், அதிர்ஷ்டக்காரர்கள் ஆகியோரைத் தாண்டி விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஒரு வேலையை செய்பவர்கள்  நினைத்ததை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எந்த நேரமும் அவர்களின் சிந்தனையை அந்த வேலை ஆக்கிரமித்து இருப்பதே காரணம் என்பதை என் தோழியின் மூலம் புரிந்து கொண்டேன். 

உடல் ஒத்துழைப்பு:

ழைப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அவரவரது உடலும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்திற்கு  ஆரோக்கியமான உணவு அருந்த வேண்டும். தேவையான அளவு ஓய்வும் வேண்டும். நல்ல உடற்பயிற்சி அவசியத்திலும் அவசியம். உடல் நன்றாக இயங்கினால்தான் மனமும் நன்றாக சிந்திக்கும். நாம் நினைத்ததை சாதிக்க இவை அனைத்தும் மிக முக்கியம். ஆதலால், பணி ஓய்வு பெற்ற என் சகோதரி தினசரி விடியற்காலை 3 மணிக்கு எழுந்தவுடன் தியானம், உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்து விடுவார். வாரத்திற்கு ஒரு நாள் மௌன விரதம் இருப்பார். அளவுக்கு அதிகமாக செல்போன் பேசுவதோ, டி.வி பார்ப்பது, வலைத்தளங்களில் செலவிடுவது செய்ய மாட்டார். அவர் இந்த நல்ல மனநிலையில் இருந்து எந்த முடிவை எடுத்தாலும் அனைத்திலும் வெற்றி பெறுவார். சிந்தை தடுமாறவே மாட்டார். அவர் பணியில் இருந்த பொழுதும் 'சிறந்த ஆசிரியர்' என்ற  'நல்லா சிரியை' விருதையும் பெற்றார். இதன் மூலம் உடல் ஒத்துழைப்பு எவ்வளவு தூரம் சாதனைக்கு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
முப்பது வயதில் நாம் எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
motivation image

திட்டமிடுதல்:

ரு வேலையை திட்டமிடும் பொழுது அதற்கு எடுத்துக் கொள்ளப் போகும் நேரத்தையும் திட்டமிட வேண்டும். அதேபோல் ஒரு சுற்று பயணத்துக்கு திட்டமிட வேண்டும் எனறால், அதற்கான செலவை திட்டமிடுவது மிகவும்  அவசியம். அதேபோல் பிள்ளைகளின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, திருமண செலவு, என்ற ஒவ்வொன்றிற்கும் திட்டமிடுதல் மிக அவசியம். திட்டமிடும்போது பணத்தை பட்ஜெட் போட்டு செலவு செய்யவும் திட்டமிடக்  கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமான செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதும், தேவையற்ற விஷயத்தில் பணத்தை இழப்பதுமே நிறைய நேரங்களில் மன உளைச்சலுக்கு காரணமாகிறது. இந்த மனநிலை நாம் சாதிக்க நினைக்கும் எதையுமே தடுக்கும். பணத்தை அழகாக நிர்வகிக்க தெரிந்தால் மனம் கட்டுக்குள் வந்து விடும். ஆதலால் ஒவ்வொரு வேலையையும் நேரத்தையும் அதற்கான செலவையும் முறைப்படி திட்டமிட்டால் எல்லாவற்றிலும் நினைத்ததை சாதித்து வெற்றி பெறலாம் என்பது உறுதி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com