35 வயதில் நிம்மதியாக வாழ, 25 வயதில் நீங்கள் செய்யவே கூடாத 8 முக்கிய தவறுகள் இதோ!

Things to do in Age 25
Things to do in Age 25AI Image
Published on

வாழ்க்கையில் 25 வயது என்பது, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் படலம் அல்லது வேலையில் சேர்ந்து வாழ்க்கையை செட்டிலாக்க நினைக்கும் ஒரு பரபரப்பான காலகட்டம் இது. நாம் முப்பது வயதைக் கடந்து திரும்பிப் பார்க்கும்போது, 25 வயதில் எடுத்த முடிவுகள்தான் நமது இன்றைய வாழ்க்கையை முழுமையாகத் தீர்மானித்திருக்கிறது என்பதை ஆழமாக உணர முடியும். 

அந்த வயதில் ஒரு சின்ன உத்வேகத்திற்காக பல சுயமுன்னேற்றப் பதிவுகளை நாம் ஆர்வமாகத் தேடிப் படிப்பது வழக்கம். அப்படிப்பட்ட இந்த பொன்னான நேரத்தில், வாழ்க்கையில் ஜெயிக்கத் துடிக்கும் இளைஞர்கள் தங்கள் கவனத்தை சிதறவிடாமல் இருக்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

வாழ்க்கையை மாற்றும் அந்த 8 விஷயங்கள்!

1. சோஷியல் மீடியாவை திறந்து நண்பர்கள் வாங்கிய கார் அல்லது வெளிநாட்டு ட்ரிப் புகைப்படங்களைப் பார்த்து நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கவலைப்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். உங்கள் பயணம் வேறு, அவர்களின் பயணம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

2. இளமை நிரந்தரம் என நினைத்து கண்டதையும் சாப்பிடுவது உடலுக்கு பெரும் கேடு. முப்பதுகளில் உடல் எடையைக் குறைக்க கஷ்டப்படுவதை விட, இப்போதே ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து பிட்னெஸில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

3. சம்பளம் வந்த முதல் வாரத்திலேயே ஆடம்பரப் பொருட்களுக்காக பணத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டு மாதக் கடைசியில் நண்பர்களிடம் கடன் வாங்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

4. நம்மை முன்னேற விடாமல் தடுக்கும், எப்போதும் நெகட்டிவாகவே பேசும் நபர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

5. எல்லாமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவோ அல்லது ஒரு புதிய பிசினஸ் ஐடியாவை செயல்படுத்தவோ தயங்கக் கூடாது.

6. இரவெல்லாம் விழித்திருந்து வெப் சீரிஸ் பார்ப்பது, மொபைல் நோண்டுவது நாளடைவில் பெரிய மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் கொண்டு வந்து சேர்க்கும்.

7. காலேஜ் முடித்தவுடனேயே நமக்கு உலகமே தெரிந்துவிட்டது என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் படிக்கவும் கற்றுக்கொள்ளவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

8. எல்லாமே செட்டிலான பிறகு ஒரு வேலையைத் தொடங்கலாம் என்று நினைத்தால் அந்த நாளே வராது. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அல்லது புதிய முயற்சியையும் தள்ளிப் போடாமல் உடனே தொடங்குவதே புத்திசாலித்தனம்.

இந்த எட்டு விஷயங்களும் கேட்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், இதைப் பின்பற்றுவது பலருக்கும் சவாலான ஒன்றுதான். 25 வயதில் நாம் போடும் இந்த அடிப்படை அடித்தளம்தான் அடுத்த பல வருடங்களுக்கான ஒரு பாதுகாப்பான அரணாக மாறப்போகிறது. 

தவறுகளைத் திருத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்வது மட்டும்தான் வெற்றியின் ஒரே ரகசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com