'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

Motivation
Motivation
Published on

'தோல்வியே வெற்றிக்கு முதல் படி' இது போன்று நம்மை உற்சாகப் படுத்தும் பல வரிகளை நாம் கேட்டிருப்போம். கேட்க்கும்போது பெரிய ஆறுதலாகவும், தைரியமாகவும் இருக்கும். சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் போது மனம் தளர்ந்து துவண்டு விடுவதுண்டு. அதுதான் தவறு.

லட்சியம்

அடைய வேண்டும் என்ற நோக்கம்...

ஆனால், அரவணைக்கும் சோம்பல்

தவிர்த்து விட்ட நேரம்

தலைத்தூக்கும் பாரம்...

அதை கடந்து விட எண்ண

அது கட்டியனைக்குது என்ன....

மனம் தளர்ந்து நிற்க

மண்டியிடும் என் ஆசைகள்.......

இந்த வரிகளை போன்றுதான், தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் பல முயற்சிகளை மேற்கொள்வர். முயற்சிகள் என்றும் வளர்ச்சிகளே... முதல் முறை முயற்சிக்கும் போது அனுபவம் ஒன்றை கற்றுத் தரும். இரண்டாவது முறை முயற்சிக்கும் போது முன் அனுபவத்தோடு மற்றொன்றை கற்றுக் கொள்வோம். இது போன்று நாம் அனைத்தையும் கற்றால் வெற்றி நிச்சியமே. நாம் எடுக்கும் முயற்சிகளின் போது கிடைக்கும் வாழ்வியல் அனுபவம் தான் அந்த கற்றல். 

இதையும் படியுங்கள்:
நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?
Motivation

ஆனால் இந்த அனுபவங்களை வாழ்க்கை நமக்கு கொடுக்கும்போது, நாம் துவண்டு நிற்கிறோம். நம் குறிக்கோள் எவ்வளவு பெரியதோ அதே அளவிற்கு நமது வாழ்வியல் கற்றலும் இருக்கும் என்பதை உணர வேண்டும். அந்த கற்றலின் மூலம் லட்சியத்தை எளிதில் அடைந்து விடலாம் என்பதை நம் மனதில் கொள்ள வேண்டும்.

எனவே மனம் தளரும் போது நமக்கு ஆறுதலாக இருக்க வேண்டியது 'நாம்' தான். தோல்விகள் இல்லையேல் வெற்றியே கிடையாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எத்தனை முறை பின்னடைவு வந்தாலும் 'என்னால் முடியும்' என்ற மந்திரத்தை நீங்களே உங்களிடம் கூறுங்கள். 'உன்னால் முடியும்' என்று பிறர் கூறுவதை விட 'என்னால் முடியும்' என நீங்கள் நினைப்பதே அதிக ஊக்கமளிக்கும். அந்த மந்திரமே உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு சேர்க்கும்.

வாழ்க்கை என்பது அனைவருக்கும் போராட்டம்தான். அதிக மதிப்புள்ளவை எதுவும் எளிதில் கிடைத்து விடாது. கிடைத்து விட்டால் அதன் மதிப்பு நமக்கு புரியாது. எனவே நமது இலக்கு மதிப்பு மிக்கது. அதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், போராடித்தான் ஆக வேண்டும். இங்கு போராட்டம் என்பது முயற்சியே. எத்தனைக்கெத்தனை பின்னடைவுகளை சந்திக்கின்றோமோ, அத்தனைக்கத்தனை அனுபவங்கள் பெற்று, நமது குறிக்கோளை அடைவோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com