"இதுவும் கடந்து போகும்..." - வெறும் வார்த்தைகளல்ல; உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் மந்திரம்!

Successful life tamil motivation
Successful life Credits AI Image
Published on

ழப்பு என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி என்பதை உணர்ந்தாலே போதும்; அதனை எளிதாகச் சமாளிக்கக் கற்றுக்கொள்ளலாம். வாழ்வில் ஏற்படும் உறவுச் சிக்கல்கள், வேலை இழப்பு அல்லது நிதி நெருக்கடி போன்றவற்றைச் சமாளிப்பது ஒரு கடினமான, ஆனால் தேவையான கலையாகும். இழப்பைச் சமாளிக்க அந்த உணர்வுகளை முதலில் ஏற்றுக்கொண்டு, துக்கத்தை வெளிப்படுத்தி, தற்போதைய சூழ்நிலையை நிதானமாக எதிர்கொள்ள வேண்டும்.

மீண்டு வருதலும் மாற்றமும்

வேலை அல்லது நிதி இழப்பு ஏற்பட்டால், சோர்ந்துவிடாமல் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்; அல்லது மாற்று வழிகளைத் திட்டமிட்டு அதில் முன்னேற முயற்சி செய்யலாம். 'இதுவும் கடந்து போகும்', 'என்னால் முடியும்' என்ற நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் நம்மைச் சுற்றி உள்ள சாதகமான விஷயங்களில் கவனத்தைச் செலுத்தலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலையும் மனதையும் உறுதியாக வைத்திருப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல்

இழப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி என்ற யதார்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நடந்ததை மாற்ற முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம். பிறகு அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும். இத்தகைய சமயங்களில் உணர்ச்சிகளை அடக்காமல் வெளிப்படுத்தி, நம் மன ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம். காயப்பட்ட எண்ணங்களை நம்பிக்கையான நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் போதுமான உறக்கம், சத்தான உணவு, தியானம் அல்லது உடற்பயிற்சி போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லது.

தொழில் மற்றும் நிதி மேலாண்மை

நிதி அல்லது தொழில் சார்ந்த இழப்பு ஏற்பட்டால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, அந்தத் தவறு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இழப்பிலிருந்து மீள ஒரே நாளில் முயற்சி செய்யாமல், ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும். வேலையை இழந்ததை ஒரு முடிவாகக் கருதாமல், புதிய தொடக்கமாகக் கருதி அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றலாம்.

நிதிச் சார்ந்த இழப்பை எதிர்கொள்ளச் சரியான திட்டமிடல் அவசியம்:

  • அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் செலவு செய்தல்.

  • தேவையற்ற ஆடம்பரச் செலவுகள் மற்றும் பயணங்களைத் தவிர்த்துச் செலவைக் கட்டுக்குள் கொண்டு வருதல்.

  • புதிய தொழில்நுட்பங்கள் அல்லது துறை சார்ந்த படிப்புகளைப் படித்துத் தகுதியை வளர்த்துக்கொள்ளுதல்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை அடியோடு மாற்றும் டாப் 8 புத்தகங்கள்... உடனே ஆர்டர் பண்ணுங்க!
Successful life tamil motivation

மொத்தத்தில் சரியான திட்டமிடலும், மன உறுதியுடன் செயல்படுவதும் எந்த இழப்பிலிருந்தும் உங்களை விரைவில் மீட்டு வரும். எதிலும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, நேர்மறையான அணுகுமுறையைக் கையாண்டால் எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலையையும்(Successful life) கடந்து வர முடியும் என்பது உண்மைதானே நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com