

உங்களை யாராவது நிறைய பேருக்கு முன்னிலையில் அசிங்கப்படுத்தியிருப்பார்கள். அந்த நேரம் எதுவும் பேச முடியாமல் பிறகு இப்படி பேசியிருக்கலாமே என்று நினைத்து வருத்தப்பட்டிருப்பீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைக்கும் எதிரியை எப்படி அமைதியாலும், அறிவாலும் அவர்கள் வாயை அடைப்பது. காலேஜ் செல்பவரோ, வேலைக்கு செல்வரோ, பிஸ்னஸ் செய்பவரோ இவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னை அவமானம். இந்த அவமானம் பல இடங்களில் வார்த்தையால் தான் நம்மை காயப்படுத்தியிருக்கும். இன்று இந்தப் பதிவில் 5 சைக்கலாஜிக் டிரிக்ஸை பற்றி பார்க்கலாம்.
1. The power of silence
இப்போது உங்களை யாராவது அவமானப்படுத்தும் போது உடனே உங்கள் ரத்தம் கொதித்து அந்த நபரை திட்ட வேண்டும், அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். நீங்கள் கோவப்பட்டால் அவன் ஜெயித்து விட்டான் என்று அர்த்தம். இதை புரிந்துக் கொள்ள புத்தர் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றை பார்க்கலாம்.
புத்தர் ஒரு கிராமத்தை கடந்து போகும் போது அங்கிருந்த மக்கள் புத்தரை பயங்கரமாக திட்டுகிறார்கள். ஆனால், புத்தர் இதை கண்டுக் கொள்ளவில்லை. புத்தரின் சீடனுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே இதைப் பற்றி புத்தரிடம் கேட்கிறான். அதற்கு புத்தர் சொன்னார், "உனக்கு ஒருவர் பரிசு கொண்டு வருகிறார். ஆனால் அந்த பரிசை நீங்கள் வாங்கவில்லை இப்போது அந்த பரிசு யாரிடம் இருக்கும்".
"கொடுத்தவரிடம் தான் இருக்கும்" என்று சீடன் கூறினான். அதே தான் இங்கேயும். அங்கே கொடுத்த வசவுகளை நான் வாங்கவேயில்லை. அதனால் அது அவனிடமே போய்விட்டது என்று கூறினார். இதுப்போல உங்களிடம் யாராவது உங்களை அசிங்கப்படுத்தும் போது நீங்க ஒரு சின்ன புன்னகையோடு அவர்கள் கண்ணை நேருக்கு நேர் பாருங்கள். நீ பேசுவது எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற Attitude காட்டுங்கள். அங்கே நீங்கள் பவர்புல்லாக தெரிவீர்கள்.
2. Reverse the attack
சில நேரங்களில் அமைதியாக இருந்தால் இவன் பயந்துவிட்டான் என்று எதிரி துள்ளுவான். அமைதி வேலை செய்யாத இடத்தில் நீங்கள் ஒரு கண்ணாடியாக மாற வேண்டும். எதை உங்கள் மீது வீசுகிறார்களோ அதை திருப்பி அவர்கள் மீது அடிக்க வேண்டும். இதை தான் Mirror effects என்று சொல்வார்கள். இதற்கு ஷாருக்கான் ஒரு சரியான உதாரணம்.
ஒரு மீட்டிங்கில் ஷாருக்கானை நிருபர் ஒருவர் சல்மான்கான் என்று கூப்பிடுகிறார். அந்த நிருபர் பெயர் லிப்பிகா பதிலுக்கு ஷாருக்கான் அந்த பெண்ணை தீப்பிகா என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண் என் பெயர் லிப்பிகா என்று சொல்லும் போது "நீங்கள் என்னை மாற்றிக் கூப்பிடுவது போல நான் கூப்பிட்டால் என்ன?" என்று கேட்கிறார். இது தான் Reverse attack.
3. Point out their weaknesses
சிலர் உங்களிடம் திமிராக கேள்விகள் கேட்பார்கள். அங்கே சென்று நீங்கள் உங்களை Defend செய்யக்கூடாது. அவன் உன் மீது ஒரு குறையை சொல்வதுப்போல நீயும் அவன் மீது இருக்கும் ஒரு குறையை சுட்டிக்காட்ட வேண்டும். இதை நீங்கள் செய்யும் போது கத்தக்கூடாது. உங்கள் குரல் மிகவும் மென்மையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். யாராவது உங்கள் கண்ணாடி மீது கல்லெரிய வந்தால், அவன் கண்ணாடி மீது பெரிய ஓட்டை இருப்பதை நியாகப்படுத்து அவன் தானாக அடங்கிப் போய் விடுவான்.
4. Accept and counter
சில நேரங்களில் எதிரி உன்னை பற்றி சொல்லும் விஷயங்கள் உண்மையாக கூட இருக்கலாம். சில இடங்களில் உங்களை அசிங்கப்படுத்தலாம். அங்கே 'இல்லை' என்று மறுப்பதற்கு பதில் அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸை பார்த்து ஒருவர், "உங்களுக்கு பெரிய அறிவாளி என்ற எண்ணமா? உங்களுக்கே டெக்னாலஜி பற்றிய விஷயங்கள் முழுமையாக தெரியவில்லையே!" என்று கேட்டதற்கு அவர் பதில், "நீங்கள் சொல்வது உண்மை தான். உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் தெரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள் தான்" என்று கூறினார். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் மீது உள்ள குறையை தானே ஏற்றுக் கொண்டதால் இங்கு சண்டை போடுவதற்கு காரணமேயில்லை.
5. Identity shift framing
இதற்கு முன்பு பார்த்த நான்கும் எதிரி பேசும் வார்த்தை மீது அட்டாக் செய்வது. ஆனால், இந்த Identity shift framing என்பது எதிரியின் புத்தி மேலே கை வைப்பது. அதாவது அவன் தன்னை ஒரு கெத்தான ஆளாக நினைத்து உங்களை கிண்டல் செய்யும் போது அவனுடைய ஹீரோ பிம்பத்தை சுக்குநூறாக உடைக்க வேண்டும். அவனை பலவீனமாக மாற்ற வேண்டும். இதை தான் identity shift framing என்று சொல்வார்கள்.
உங்கள் நண்பன் உங்களை அசிங்கப்படுத்திவிட்டு ஜோக்குக்கு தான் அப்படி சொன்னேன் என்று சொன்னால். "நீ எப்போது மெச்சூர்டாக நடந்துக் கொள்ள போகிறாய். எப்போதுமே சின்ன குழந்தை மாரியே நடந்துக் கொள்கிறாய்!" என்று கூறும்போது அவன் பலவீனமாகி விடுவான். இதை தான் Savage move என்று சொல்வார்கள். இந்த 5 டிரிக்ஸூம் உங்களிடம் இருக்கும் பிரம்மாஸ்திரம் மாதிரி அதை பயன்படுத்த நீங்கள் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம்.