ஏதாவது ட்ரை பண்ணுங்க, அதுல தோத்து போனாலும் பரவால்ல!

Motivation
Motivation
Published on

என்னோட வாழ்க்கையில ஒரு 5 வருஷம் பின்னோக்கி போய், நீ எதிர்காலத்துல என்னவா ஆகப் போறேன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுனே தெரியாம முழிச்சிருப்பேன். ஆனா இப்போ, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத துறையில பயணிச்சிக்கிட்டு இருக்கேன்.

இதுக்கு மிகப்பெரிய காரணமா நான் சொல்ல விரும்புறது, எத பத்தியும் கவலைப்படாம நான் எடுத்த சில முடிவுகள்தான். உண்மையிலேயே இந்த சொசைட்டியில ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் ஆம்பளைங்க தைரியமான முடிவு எடுக்குறது மிகப்பெரிய விஷயம். ஏன்னா, இந்த சமூகம் ஆம்பளைங்க கிட்ட ரொம்ப அதிகமாவே எதிர்பாக்குது. 

அது எல்லாத்தையும் தாண்டி ஏதோ ஒரு தைரியத்துல முரண்பாடான முடிவு எடுக்குறதெல்லாம் சாதாரண விஷயம் இல்ல. யார் வேணா என்ன வேணா சொல்லட்டும், என்னை பொறுத்த வரைக்கும், என்னுடைய முடிவுகள், அது மூலமா எனக்கு கெடச்ச அனுபவங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய பொக்கிஷங்கள்னுதான் நான் சொல்லுவேன்.

2019-ல இருந்து YouTube YouTube-னு சுத்திக்கிட்டு இருந்தேன். எவனெவனோ என்னென்னவோ சொன்னான். இருக்கட்டும் பரவாயில்ல, நான் கத்துக்குறேன். சரமாரியா வீடியோக்கள் போட்டேன். எத பத்தியும் அதிகமா யோசிக்கல. கிட்டத்தட்ட 400 வீடியோக்களுக்கு மேல போட்டேன். எல்லாம் ஏதோ, ஏனோ தானோன்னு போட்ட வீடியோகாள் கிடையாது. எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு உழைப்பு இருக்கும். புதுசா நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். கோர்வையா பேச கத்துக்கிட்டேன். கேமரா பயம் போச்சு. கிட்டத்தட்ட 18 ஆண்டு கால ஸ்கூல், காலேஜ் வாழ்க்கையில, மேடை ஏறி தைரியமா பேசாத எனக்கு இதுவே பெரிய விஷயம். அந்த பயத்தை ஒரு ஒன்றரை ஆண்டு கால youtube பயணம் போக்கிடுச்சு.

அப்படியே கோரா (Quora) பக்கம் வந்தோம்னா, அங்க கொஞ்ச காலம் சிறப்பா போச்சு. என்னென்னமோ எழுதுனேன். அப்போல்லாம் கோரா வேற லெவல்ல இருக்கும். டெய்லி ரெண்டு பதில் போடலைன்னா தூக்கம் வராது. போதாத குறைக்கு ஆங்கிலக் கோராவுல பார்ட்னர் ப்ரோக்ராமுக்கு பணம் வேற குடுத்தாங்க. அதுல கேள்விய கேட்க ஒரு ட்ரிக்ஸ் கண்டுபிடிச்சு, கிட்டத்தட்ட ஒரே வருஷத்துல 4500 டாலர்களுக்கு மேல சம்பாதிச்சேன். தமிழ்லயும் நிறைய கேள்விகள் கேட்டேன். போய் பாருங்க தமிழ் கோராவுல அதிக கேள்விகள் கேட்டது நான்தான். இது எல்லாத்துக்கு பின்னாடியும் பல மணி நேர உழைப்பு இருக்கு. என்ன செஞ்சா என்ன? செய்யற வேலையில முழு ஈடுபாட்டோட இருக்கோமான்றதுதான் முக்கியம்.

கோராவுல எழுதி வாழ்க்கையில பெரிய ஆளாகிடலாம்னு நெனச்செல்லாம் நான் பதில் எழுதல. அப்படியே எழுதுனேன், அந்த ஃபீல் நல்லா இருந்துச்சு, தொடர்ந்து எழுதுனேன். அப்புறம் பார்ட்னர் ப்ரோக்ராம் எல்லாம் ஊத்தி மூடிட்டாங்க. உடனே கோரா மூலமாவே ஒரு வாய்ப்பு கிடைச்சுச்சு. முதல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா, ஒன்னுமே இல்லாததுகு வர வாய்ப்ப ஏன் விடுவானேன்னு சரி சொன்னேன். ஆனா அந்த ஒரு சரி, என் வாழ்க்கைய அடுத்த டைமென்ஷனுக்கு கொண்டு போச்சு.

இதையும் படியுங்கள்:
அப்பளம்! பப்படம்! பப்பட்! வித்தியாசம் என்ன தெரியுமா? 
Motivation

அங்க போய் என்னால முடிஞ்ச வரைக்கும் புதிய விஷயங்கள கத்துக்கிட்டேன். அங்க எனக்குன்னு ஒரு போரட்ஃபோலியோ பில்ட் ஆச்சு. அது மூலமா இன்னும் நிறைய வாய்ப்புகள் கெடச்சுச்சு. இந்த பயணத்துல நான் முயற்சி செஞ்சு தோத்துபோன விஷயங்களும் ஏதோ ஒரு விதத்துல ரொம்பவே உதவியா இருந்தது சந்தோஷம். இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு தெரியல. தொடர்ந்து அப்கிரேட் பண்ணிக்கிட்டேதான் இருக்கேன். 

இதுவே போதும், இப்படியே இருந்துரலாம்னு என்னால இருக்க முடியாது. நான் கிறுக்குத்தனமா ஏதாவது புதுசா பண்றதுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அது மூலமா புதுசா எதோ ஒன்னு கத்துக்கிட்டு தானே இருக்கேன். அது கண்டிப்பா எதிர்காலத்துல ஏதோ ஒரு விதத்துல உதவும்னு நம்புறேன். இது ஜாலியாவும், இருக்கு மன அழுத்தமாவும் இருக்கு.

நான் உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு பெரிய ஞானி எல்லாம் கிடையாது. இருந்தாலும் சொல்றேன்,

"ஏதாவது ட்ரை பண்ணுங்க, அதுல தோத்து போனாலும் பரவால்ல"… ஆனா, எதுவும் பண்ணாம சும்மா மட்டும் இருக்காதீங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com