உங்களை சிறப்பாக மாற்ற முயற்சிக்கிறீர்களா?.. இந்த 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! 

Improve yourself.
Improve yourself.

உலகில் பெரும்பாலான நபர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே முன்னேற்றம் பெறுவதற்கான வழியைப் பின்பற்றி, செயலில் இறங்கும் தைரியம் இருக்கும். அப்படி நீங்களும் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறீர்களா?. இந்த பதிவில் நான் சொல்லப்போகும் 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 

1. நோகங்களை அமைக்கவும், இலக்குகளை அல்ல: குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயம் செய்து அதை செய்ய முயல்வதற்கு பதிலாக, நீங்கள் வாழ்வில் எதை அடைய விரும்புகிறீர்கள்? அதை அடையும் வழிமுறைகள் என்னென்ன? என்பதில் கவனம் செலுத்துவது சிறந்தது. வெறும் இலக்குகள் மட்டும் வைத்துக் கொண்டு பயணித்தால், ஒருவேளை அதை அடைய கஷ்டமாக தோன்றினால் கைவிட்டு விடுவீர்கள். இதுவே ஒரு நோக்கத்துடன் நீங்கள் செயல்படும்போது, நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும். 

2. உங்களிடம் முதலில் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்: வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல் செல்லாத போது, நீங்களே உங்களை மட்டம் தட்டாமல், உங்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொல்லிக் கொள்ளுங்கள். உங்களையே நீங்கள் சிறப்பாக நடத்தாதபோது, பிறர் எப்படி உங்களை சிறப்பாக நடத்துவார்கள் என நினைக்கிறீர்கள்?. நீங்கள் எதை சாதிக்க வேண்டுமென்றாலும் முதலில் உங்களை நீங்கள் மதித்து நடக்க வேண்டும். 

3. ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்: வாழ்க்கையில் புதிய விஷயங்களை அணுகும்போது அதில் முதலில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அணுகுவது நல்லது. உங்களை முன்னேற்றும் விஷயங்களில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு ஈடுபடும்போது அந்த செயலைச் செய்வதால் உங்களுக்கு ஒருபோதும் விரக்தி மனநிலை ஏற்படாது. எனவே புதிய விஷயங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு உங்கள் கற்றல் திறனை மேம்படுத்துங்கள். 

4. நீங்கள் வித்தியாசமாக இருப்பதை கொண்டாடுங்கள்: நீங்கள் எந்த அளவுக்கு பிறரை விட வித்தியாசமாக இருக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய தனித்துவம். எனவே அவற்றைப் பற்றி கவலைப்படாமல் எந்த தயக்கமும் இன்றி கொண்டாடுங்கள். உங்களுடைய தனித்துவங்கள், திறமைகள், பிறரை விட வித்தியாசமாக சிந்திக்கும் தன்மை போன்றவையே உங்களை மற்ற ஒரே மாதிரியான கூட்டத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. 

இதையும் படியுங்கள்:
Dumbo Octopus: இது ஆழ்கடலின் அழகான அதிசயம்! 
Improve yourself.

5. அனைத்திற்கும் ‘ஏன்’ என்ற கேள்வி கேட்டு தொடங்குங்கள்: நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் செய்யப் போகும், செய்ய விரும்பும் எல்லா விஷயங்களுக்கும் ‘ஏன்’ என்ற கேள்வியை கேளுங்கள். ஏன் நீங்கள் முன்னேற வேண்டும்? ஏன் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்? ஏன் ஒரு புதிய விஷயத்தை தொடங்கினீர்கள்? ஏன் இந்த பொருளை நான் வாங்க வேண்டும்? என அனைத்திற்கும் ஏன் என்ற கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நீங்கள் யோசித்தாலே, வாழ்வில் சரியான விஷயங்களைத் தேர்வு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com