உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள புரிதல் மிக மிக அவசியம்!

Understanding is very important
Understanding
Published on

டுத்தவர்களின் சூழல்களைப் புரிந்து நடந்துக் கொள்ளுதல் மிகச் சிறந்த தலைமைக் குணம். இதற்கு விசாலமான பார்வை தேவை. கொஞ்சம் நிதானம் அவசியம்.

'புரிதல்' குறைபாடு உடையவர்களை எப்படி புரிந்து கொள்வது? எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள். அடுத்தவர்களின் சிரமங்களை யோசிக்காதவர்கள் தன் நலனை மட்டுமே குறிவைத்து சிந்திக்கும் சுயநலவாதிகள். அவசரப்பட்டு நிதானத்தை இழப்ப வர்கள். அவசரகதியில் முடிவெடுப்பவர்கள். அடுத்தவர்களின் சூழல்களை, மனோ பாவங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள் போன்ற பலதரப்பட்ட மனிதர்களைச் சொல்லலாம்.

கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களைப் போன்று நம்மில் பலருக்கு வாழ்க்கையை, சமூகத்தைப் பற்றிய 'புரிதலில்' கோளாறு இருக்கிறது. சுற்றியிருப்பவர்களைப் புரிந்து கொள்ளவில்லை யென்றால் இழப்பு நமக்குத்தான். உறவுகளைத் தக்கவைத்துக் கொள் வதற்கும், புதிய உறவுக்கான தேடுதலுக்கும் 'புரிதல்' அவசியமாகிறது.

புரிதலின் 'முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் அடுத்தவர்களின் பார்வையைப், பேச்சினை உடல் அசைவினை வைத்தே அவர் என்ன நினைக்கிறார்? என்பதை முன் கூட்டியே யோசிப்பார்கள். 

சிலரின் கண்பார்வை ஆயிரம் அர்த்தங்களைப் புரியவைக்கும். மனிதர்களின் உடல் அசைவுகள் ஒவ்வொன்றும் பல அர்த்தங்களைக் கொண்டவைகள்.

புரிதல், நமக்குள் ஏற்படும் ஒருவகையான 'உள்ளுணர்வு', அடுத்தவர் களைப் பற்றிய ‘கணிப்புத் திறன்' மற்றும் 'மதிப்பீடு' ஒரு மனிதனைப் பார்த்தவுடன் ஓரளவிற்குத் தீர்மானிப்பார்கள் 'புரிதல்' திறன் கொண்டவர்கள். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு என்று பல பயிற்சிகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள்!
Understanding is very important

மனைவிக்கு கடும் தலைவலி, சப்தத்தை அவரால் தாங்க முடியாது. ஆனால் வீட்டிலிருக்கும் கணவனோ தொலைக்காட்சிப் பெட்டியை அதிக ஒலியில் அலற வைத்துக் கொண்டிருக்கிறார். மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத கணவன், என்றாவது ஒருநாள் இதன் வெளிப்பாடு இருக்கும்.  கணவனுக்குப் புரிதல் அவசியம். இல்லையென்றால் சங்கடம்தான்.

காலங்கள் ஆனாலும் முதலில் 'புரிதலைப்' புரிந்து கொள்ளுங்கள். அதில்தான் வாழ்வின் முழுமையிருக்கிறது. இந்த உணர்வுகளோடு இன்று ஒருநாள் செயல்படுங்கள். உங்களின் எதிர்பார்ப்பில் நியாயமிருந்தாலும் கோபம்வராது. அடுத்தவர் நிலையிலிருந்து எதையும் யோசிக்கத் தொடங்கிவிடுவீர். முடிந்த அளவிற்கு உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். அடுத்தவர்கள் உதவ வில்லையென்றாலும் அதைப் புரிந்து நடந்து கொள்வதும் வாழ்க்கைக்கு அடக்கம்தானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com