இலக்கை அடைய உதவும் காட்சிப்படுத்துதல் (Visualization) டெக்னிக் அவசியமும் வழிமுறைகளும்!

Visualization technique
VisualizationImage credit - pixabay
Published on

நாம் விரும்பிய இலக்குகளை அடைய கடின உழைப்பும் சரியான திட்டங்களும் தேவை. விஷுவலைசேஷன் எனப்படும் காட்சிப்படுத்துதல் என்ற டெக்னிக் நாம் விரும்பிய விஷயங்களை அல்லது இலக்குகளை அடைய உதவும் ஒரு சிறந்த முறையாகும். அதை எப்படி செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காட்சிப்படுத்தலின் அவசியமும் வழிமுறைகளும்;

சிலர் கடினமாக உழைத்து நன்றாக திட்டமிட்டு வேலை செய்தாலும் தங்களுடைய இலக்கை அடைய நீண்ட நாட்கள் எடுக்கும். ஆனால் விரும்பிய விஷயத்தை காட்சிகளாக மனக்கண்ணில் காணும்போது, அவற்றை விரைவில் அடையக்கூடிய சூழ்நிலை உருவாகி கனவு நிஜமாகும்.

காட்சிப்படுத்துதல் வழிமுறைகள்;

ஒரு அமைதியான இடத்தில் அமரவும். தரையில் ஏதாவது விரித்து அமரலாம் அல்லது நாற்காலியில் கூட அமரலாம். செல்ஃபோனை அமைதி நிலையில் வைக்கவும். யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் அறைக்கதவை தாழிட்டுக் கொள்ளலாம். தரையில் ஏதாவது ஒரு விரிப்பு அல்லது நாற்காலையில் அமர்ந்து கொள்ளலாம்.

கண்களை மூடிக்கொள்ளவும். மனதையும் உடலையும் அமைதிப்படுத்த எளிய சுவாசப் பயிற்சி தேவை. ஆழமான மூச்சை உள்ளிழுத்து, நான்கு எண்ணி மூச்சை உள்ளே வைத்து பின்பு மெதுவாக மவெளியேற்றவும்.

ஒரு தெளிவான படத்தை கற்பனையில் உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம். கற்பனையில் சீராக ஓடுவதைப் போலவும் உடல் வலிமை பெற்று திகழ்வதையும் எல்லைக்கோட்டை மற்றவர்களை முந்திக்கொண்டு நீங்கள் கடப்பது போலவும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். பின்னர் வெற்றிக் கோப்பையை கையில் வாங்குவதுபோல நினைத்துப்பார்க்க வேண்டும்.

புலன்களைப் பயன்படுத்துதல்;

காட்சிப்படுத்தும்போது பார்த்தல், கேட்டல் தொடுதல் போன்ற மூன்று புலன்களை பயன்படுத்துவது மிக முக்கியம். ஓடும் போது என்ன பார்க்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்? என்ன மாதிரியான மொழிகளை கேட்கிறீர்கள்? வெற்றிக்கோப்பையை தொடுதல் என்று விவரமாக கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

உணர்ச்சிபூர்வமாக உணர்தல்;

ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து முதலாவதாக வந்தால் உங்கள் மனம் எத்தனை தூரம் திருப்தியும் உற்சாகமும் அடையும் என அந்த உணர்ச்சிகளை இப்போது காட்சிப்படுத்தும்போது இணைக்க வேண்டும். இந்த இணைப்பு விருப்பத்தை வலுப்படுத்த உதவுகிறது.

பயிற்சி;

இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 5 முதல் 15 நிமிடங்கள் செலவிட வேண்டும். எத்தனை அதிகமாக காட்சிப் படுத்துகிறோமோ அத்தனை விரைவில் எண்ணியது நிறைவேறும்.

இதையும் படியுங்கள்:
தவறு செய்வது தவறில்லை ஆனால்..!
Visualization technique

காட்சிப்படுத்ததலின் பலன்கள்

நம்பிக்கை அதிகரிப்பது;

காட்சிப்படுத்தும்போது தன்னுடைய திறன்களில் ஒருவருக்கு அதிக நம்பிக்கை உருவாகும். வெற்றியை கற்பனை செய்வதன் மூலம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை அதிகமாகும்.

இலக்குகளை தெளிவுபடுத்துதல்;

தனக்கு என்ன வேண்டும் என்பதை ஒருவர் தெளிவாக காட்சிப்படுத்தும்போது அதற்கு சரியான திட்டமிடலும் அதை நோக்கிய பயணமும் இன்னும் தெளிவாக தெரியவரும்.

தடைகளை சமாளித்தல்;

இலக்கை நோக்கிய பயணத்தில் சவால்களும் தடைகளும் வருவது சகஜம். ஆனால் காட்சிப்படுத்தும் சிரமங்களை கையாள்வதற்கான மனநல திட்டத்தை உருவாக்க உதவுகிறது.

வாய்ப்புகள்;

இலக்குகளில் கவனம் செலுத்தி வெற்றியைக் காட்சிப்படுத்திப் பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் அதற்கான சூழ்நிலைகளையும் ஈர்க்க முடியும் என்று வெற்றியாளர்கள் மற்றும் தன்னம்பிக்கை நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com