
உலகில் வாழ்ந்து மறைந்த பல அறிஞர்களும் தலைவர்களும், தாங்கள் வாழ்நாளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், எதிர்கால சந்ததியரை ஊக்குவித்து நல்வழிப்படுத்தும் வகையிலான பல பொன்மொழிகளை கூறிச் சென்றுள்ளனர். சுவாமி விவேகானந்தர் கூறிச் செற்றுள்ள முக்கிய பொன்மொழிகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
இளைஞர்களுக்கான சக்தி வாய்ந்த விவேகானந்தர் பொன்மொழிகள் (Vivekananda Quotes):
எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நம் பக்கம் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.
கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார். அதில் துணிச்சல் தென்படும். அதைப் புரிந்துகொண்டால், துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்.
கீழ்ப்படியக் கற்றுக்கொள், கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யக் கூடாது.
வெற்றி மற்றும் தைரியம் குறித்த விவேகானந்தர் பொன்மொழிகள்:
உங்களிடம் எல்லையற்ற பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் வரும்.
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களைச் செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
கடின உழைப்பு, அஞ்சாத மனம் வெற்றியை நோக்கி இட்டுச் செல்கிறது. எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை உழைமின்.
அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை இவையே நமக்குத் தேவை.
தன்னம்பிக்கை குறித்த உத்வேகமளிக்கும் விவேகானந்தர் பொன்மொழிகள் (Vivekananda Quotes):
"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.
உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து.
இதயம் சொல்வதை செய். வெற்றியோ தோல்வியோ, அதை தாங்கும் சக்தி இதயத்திற்கு மட்டும் தான் உண்டு.
கல்வி மற்றும் வாழ்க்கை குறித்த பிரபலமான விவேகானந்தர் பொன்மொழிகள்:
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியா விட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்துவிட்டால் உலகமே சொர்க்கமாகிவிடும்.
அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும். அறிவுதான் சக்தி.
பிறருக்கு எவன் ஒருவன் உதவுகிறானோ அவனுக்கு கடவுளே உதவுவார்.
விவேகானந்தர் பொன்மொழிகளை அனைவரும் பின் பற்றி வாழ்க்கையை வளமானதாகவும் அழகானதாகவும் மாற்றுவோம்.