வளமான எதிர்காலம் வேண்டுமா? இந்த 5 விஷயங்களை விட்டுவிடுங்கள்!

motivation Image
motivation Imagepixabay.com

வ்வொரு மனிதருக்கும் வெற்றி என்பது  பெற்றோர் உற்றோர் வாழும் காலத்திலேயே கிடைக்க வேண்டும் என்பதே அவா. நம்மைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அவர்களே என்பதால் நம்முடைய வெற்றி அவர்கள் முன் நிகழும்போது இன்னும் கூடுதல் மதிப்பைப் பெறுகிறது என்பதுதான் இதற்குக் காரணம். ஆனால் இந்த வெற்றி என்பது அனைவருக்கும் சாத்தியமாகிறதா? வெற்றி என்பதில் நமது  வளமான எதிர்காலமும் அடங்கும் அந்த வளமான எதிர்காலத்துக்கு தடையாக உள்ள ஐந்து விஷயங்கள் இவை.

1. தாழ்வு மனப்பான்மை 

பெரும்பான்மையான மனிதர்களுக்கு அவர்கள் எவ்வளவுதான் கல்வியில் சிறந்தும், செல்வத்தில் மகிழ்ந்து இருந்தாலும் என்னால் இது முடியுமா? இதை செய்ய நான் தகுதியானவனா? என்பது போன்ற சந்தேகங்களினால் அவர்களுக்குள் ஒரு  தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கும். இந்த தாழ்வு மனப்பான்மையால் அவர்களின் முன்னேற்றம் தடைபடும். எதிலும் எப்போதும் ஓர் அச்சத்துடன் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையை இந்த தாழ்வு மனப்பான்மை அளிக்கும். தாழ்வு மனப்பான்மை உள்ளவரால் மற்றவர்களுடன் கலந்து பழகுவதற்கோ அல்லது எந்த செயலுக்கும்  முன்னால் செல்வதற்கோ தயங்குவார்கள். இதுவே அவர்களின் வளமான எதிர்காலத்தை பாதித்துவிடும் ஆகவே தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி நம்பிக்கையுடன் முன்னேறுவோம்.

2. ஒப்பீடு பார்த்தல்

து மிக முக்கியமானதாகிறது. இந்த காலத்தில் அன்று கிராமங்களில் இருந்தபோது இந்த ஒப்பீடு என்பது சிறிதளவு இருந்தது. இன்று வசதிகள் பெருகிவிட்ட நகரங்களில் இந்த ஒப்பீடு பார்த்தல் என்பது மிகப்பெரிய ஒரு பின்னடைவாகவே உருவாகியுள்ளது எனலாம். ஏனெனில் படித்த இன்றைய தலைமுறையினரிடம் அனைத்து வசதிகளும் நிறைந்து உள்ளது. இருப்பினும் திருப்தியின்றி இன்னும் இன்னும் என்று வேகமாக பறந்து கொண்டிருக்கிறார்கள். நீ ஒரு மாடி கட்டினால் நான் இரண்டு மாடி கட்டுவேன் என்று ஒரு போட்டியுடனே ஒப்பீடு பார்த்து வாழ்வதால் நம்மால் முனைப்புடன் இயங்க முடியாது என்பதே  உண்மை. ஒப்பீடுகள் மனதிற்கு அழுத்தம் தருகிறது. ஆகவே இதைத் தவிர்த்து நம் வழியில் முன்னேறினார் வளமான எதிர்காலம் நிச்சயம்.

 
3. சுயநலம்

சுயநலம் என்பது நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவசியம் தேவைதான். ஏனெனில் தனக்கு மிஞ்சி தான் தானம் என்பது பெரியோர்களே சொல்லியுள்ளனர். எனினும் அதிகப்படியான சுயநலம் என்பது நமது வளமான எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். காரணம் சுயநலத்துடன் இருப்பவர்கள் அடுத்தவருக்கு எந்த விஷயத்திலும் உதவிக்கரங்களைத் தர தயங்குவார்கள். ஒரு சூழலில் மற்றவர்களைத் தவிர்த்து சுயநலத்துடன் இயங்குபவர்களை ஒரு கட்டத்தில் மற்றவர்களும் தவிர்த்து விடுவார்கள். தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு யாருமின்றி தனித்து நிற்கும் சூழலால் நமது எதிர்காலம் நிச்சயம் பாதிக்கும். சுயநலத்துடன் சற்றே பொது நலமும் இருந்தால் எதிர்காலம் சிறக்கும்.


4. புறம் பேசுதல்

ரு நட்போ அல்லது உறவோ முறிவதற்கு பின் இருப்பது இந்த விஷயமே. ஒருவரின் செயல்கள் அல்லது குணங்கள் நமக்கு எதிராக இருந்தால் அவரிடமே பேசி தெளிவு பெறுவதை விடுத்து சம்பந்தம் இல்லாத வேறொரு நபரிடம் அவரைப் பற்றி பேசும் பழக்கம் இருந்தால் முதலில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு முரண்பட்ட விஷயத்தையும் முகத்தின் முன் பேசாமல் முதுகின் பின்புறம் பேசுதல் என்பது மிக கெடுதலான ஒரு விஷயம். நாம் பேசும் வார்த்தைகள் கண் காது மூக்கு என்று வைத்து வேறொரு வடிவில் சம்பந்தப்பட்டவரிடம் சென்று சேரும். இதனால் வரும் விளைவுகள் மோசமானதாக இருக்கும் இதன் காரணமாகத்தான் உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகிறது. இது நமது வளமான எதிர்காலத்தை பாதிக்கும் ஒரு செயலாகும். ஆகவே புறம் பேசுதல் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய விஷயமாகிறது.

இதையும் படியுங்கள்:
கருமை நிறம் கொண்ட உணவுகளில் இருக்கும் கணக்கில்லா நன்மைகள்!
motivation Image

5. தனித்து இருத்தல்

முன் சொன்ன தாழ்வு மனப்பான்மைக்கும்  தனித்து இருத்தலுக்கும் நிறைய சம்பந்தம் இருந்தாலும் ஒரு சிலர் இயல்பாகவே கூட்டத்தில் கலந்து பழகும் திறனற்று தனித்து இருப்பதையே விரும்புவார்கள். தனித்து இருக்கும்போது நிறைய வாய்ப்புகளை அறியாமல் அவற்றை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்டவர்களுடன் இயைந்து பழகும் போது நிறைய அனுபவங்களைப் பெறலாம். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவைகள் மூலம் நாம் வளமான எதிர்காலத்தைப் பெறும் வாய்ப்பும் வரும். ஆகவே தனிமையில் இருப்பதைத் தவிர்த்து உங்களுக்கென ஒரு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நட்புகள் உங்கள் எதிர்காலத்துக்கு அஸ்திவாரமாகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com