தனிச் சிறப்பு அடைய சீன சிந்தனையாளர் சொன்ன வழிகள்!

Motivation Image
Motivation Image
Published on

"The will to win, the desire to succeed, the urge to reach your full potential... these are the keys that will unlock the door to personal excellence. வென்றுவிடும் திண்ணம், வெற்றி பெறும் விருப்பம், நம்மின் முழுத் திறமையையும் அடையும் உந்துதல் இவையே நம் தனிப்பட்ட சிறப்பை அடையும் கதவைத் திறக்கும் திறவுகோல்கள். "-Confucius.


வாழ்வில் வெற்றி என்பதே வாழ்தலின் சிறப்பு என்பதால் வெற்றியை நோக்கியே நம் அனைவரின் கவனமும் இருக்கும். வெற்றி என்பதன் அடிப்படையே மற்றவரிடம் இருந்து வேறுபடும் அவரவர் தனிச்சிறப்பில்தான் அமைகிறது. அந்த தனிச்சிறப்பை எப்படி அடைவது? இதற்கான 3 வழிகளை நமக்கு காட்டியுள்ளார் உலகின் மிகச்சிறந்த சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆன கன்பூசியஸ்.

வென்று விடும் திண்ணம்
இங்கு திண்ணம் என்பது உறுதியைக் குறிக்கிறது. நம் இலக்கு எதுவாக இருந்தாலும் அது குறித்தான எவ்வித சந்தேகமும் இன்றி அதைப் பற்றிய முழுமையான புரிதல் கற்றலுடன் அதை வென்று விடும் உறுதி இருக்கவேண்டும். ஒரு போட்டியில் கலந்து ஜெயிக்க வேண்டும் என்று ஆவல் மட்டும் போதுமா? அந்தப் போட்டியின் விதிமுறைகளை அறிந்து பயிற்சியுடன் முயற்சி செய்தால் மட்டுமே உறுதியான வெற்றி கிடைக்கும் எனும் நம்பிக்கை தோன்றும். எதிலும் வென்று விடும் உறுதி இருப்பது அவசியம்.

வெற்றி பெறும் விருப்பம்
யாரோ எவரோ வெற்றி பெற்றவர் சொல்கிறார் என்று நாமும் அதன் வழியே செல்லலாம் என்று நினைப்பது தவறு. பெற்றோர் சொல்கிறார்களே என்று மருத்துவ படிப்பு சேர்ந்து விருப்பமின்றி கடமைக்காக மருத்துவராவதில் எந்த வெற்றியும் கிடையாது. அதில் உள்ள தனிச்சிறப்பு நிச்சயம் உங்களை வந்தடையாது. எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி பெறும் விருப்பம் நமக்குள் இருந்தால் மட்டுமே அது தனிச்சிறப்பை அடைகிறது வேறு ஒருவரின் வழிகாட்டுதலில் எங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு அவருடையதாகத்தான் இருக்குமே தவிர உங்கள் முழு விருப்பத்தில் கீழ்வராது . ஆகவே நான் வெற்றி பெறுவேன் என உங்களுக்குள் கூறிக்கொண்டு  விருப்பத்துடனும் முழு ஈடுபாடுடனும் செயலில் இறங்கினால் அதுவே உங்களுக்கான தனிச்சிறப்பைத் தந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து எளிய பானங்கள்!
Motivation Image

நமது முழுத் திறனையும் அடையும் உந்துதல்
வெற்றியாளர்களான தனிச்சிறப்பு மிக்கவர்களை நன்றாக உற்று கவனித்து பாருங்கள். அவர்கள் மேலும் மேலும் தங்கள் திறன்களை  வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துபவர்களாகவே இருப்பார்கள். சாதித்தவர்களை கேட்டால் "இன்னும் எனது முழு திறமையை நான் காட்டவில்லை அதை நோக்கி செல்கிறேன்" எனும் பதில் வரும். காரணம் அவர்களது வெற்றியை அவர்களே முறியடிக்கும் திறமை அவர்களிடமே உள்ளது என்பதை புரிந்து கொண்டு அதை நோக்கி பயணிப்பவர்கள் அவர்கள்.

ஆகவே நமது பலம் இதுதான் என நீங்களே முடிவுக்கு வந்துவிடக் கூடாது. நமது முழுத் திறனையும் வளர்த்துக் கொள்ள நமக்குள் உந்துதல் வரவேண்டும். இந்த உந்துதல் நமது தனிச்சிறப்பை நமக்கு உணர்த்தி நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com