பிரச்னைகள் நம்மை நெருங்காமல் இருக்கணுமா?

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ந்த ஒரு பிரச்னையும் உருவாகுவதற்கு நாம்தான் காரணமாக இருக்கிறோம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக ஒவ்வொரு பிரச்னைக்குப் பின்னாலும் நம் செயல்பாடுகளும் எண்ணங்களும் இருக்கும்.

ஒரு உதாரணம் இங்கு கொடுக்க விரும்புகிறேன். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டில் இருந்து வெளியேறும் அசுத்த தண்ணீரை உங்கள் வீட்டு வாசல் வழியாக விடுகின்றார் என்று வைத்து கொள்வோம். அசுத்த தண்ணீரை பார்த்தவுடன் என்னடா இது காலை அசுத்தமான தண்ணீரில் வைக்க வேண்டியுள்ளதே, இது என்ன பெரிய பிரச்னையாக இருக்கும்போல் இருக்கிறதே என வரிந்து கொண்டு பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் சண்டைக்கு நின்றீர்கள் என்றால் அப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. நீங்கள் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல, அது கை கலப்பில் வந்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடுகிறது.

அதே நிகழ்வை பிரச்னையாக எடுத்து கொள்ளாமல் சம்பந்தப்பட்ட பக்கத்து வீட்டுகாரரிடம் அசுத்த தண்ணீரால் விளையும் சுகாதார கேடுகளை பற்றி சொல்லி இனி தண்ணீரை உங்கள் வீட்டு வாசல் வழியாக வராமல் அதே சமயத்தில் வேறு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மாற்று வழியை ஏற்பாடு பண்ண சொல்லலாம்.
நல்ல விதமாக அவர் மேற்கொண்டு அசுத்த தண்ணீரை விடாமல் இருந்தால் சந்தோசம்.

அறிவுரை சொல்லியும் அவர் தொடர்ந்து தன் தவறை திருத்தி கொள்ளாமல் இருந்தால், சுகாதாரத்துறை, காவல்துறை, சட்டம் போன்ற வழிகளில் அணுகி அந்த நிகழ்வுக்கு தீர்வு காணலாம்.
அதை விடுத்தது அந்த நிகழ்வை பிரச்னையாக கருதினால் ஒரு பிரச்னை போய் மற்றோர் பிரச்னை உருவாகும்.

எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும். நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்றுக்கொண்டால் அங்கு பிரச்னை என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

இதையும் படியுங்கள்:
மனிதநேயத்தை தேடிச் சொல்லும் நிலைதான் உள்ளது!
motivation article

அமைதியாக ஏற்று கொள்ளும்போது உணர்ச்சிகளுக்கு இடமில்லை. உணர்ச்சிகள்தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய பிரச்னையாக ஆக்கி விடுகிறது. இதில் கோபத்திற்கு முக்கிய பங்குண்டு. சாதாரண நிகழ்வையே இந்த கோபம் பெரிய பிரச்னையாக்கிவிடும். ஆனால் அன்பு என்பது எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீரை போன்று நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே மாற்ற செய்யும் சக்தி உண்டு.

கணவன் மனைவியரிடையே நடக்கும் ஒரு சாதாரண பேச்சு வார்த்தை கூட சமயத்தில் பெரிய பிரச்னையை உண்டாக்கிவிடும். அவர்களுடைய வாழ்க்கையையே கேள்வி குறியாக்கிவிடும். காரணம் பேச்சின் உண்மையான அர்த்தத்தை தவறாக எடுத்துக்கொண்டு அதை ஒரு பிரச்னையாக்கி விடுவதுதான்.

இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்னைகளுக்கு காரணம் அடுத்தவர் அல்ல நாம்தான் என்று. மனதை அமைதியாக வைத்திருந்தால், எந்த சூழ்நிலையிலும் பிரச்னைகள் நம்மை நெருங்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com