ஆளுமை வகைகள் என்றால் என்ன? ஒரு எளிய விளக்கம்! 

Personality Types
What are Personality Types?
Published on

நாம் யார்? நம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துவது எது? இது போன்ற கேள்விகள் நூற்றாண்டுகளாக மனிதர்களை அதிகம் சிந்திக்க வைத்தவை. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் ஆளுமைகள் 16 வகைகளாகப் பிரிக்கப்பட்டன. இது நம்மைப்பற்றி புரிந்துகொள்ளவும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் சிறப்பாக தொடர்பு கொள்ளவும் உதவும். இந்தப் பதிவில் அத்தகைய ஆளுமை வகைகள் எப்படி பிரிக்கப்பட்டன என்பதைப் பார்க்கலாம். 

ஆளுமை வகைகள் என்றால் என்ன? 

1940களில் ‘கார்ல் ஜங்’ என்பவர் ஒருவரது பணி அடிப்படையில், கேத்ரின் குக் மற்றும் ஈசபெல் பிரிக்ஸ் ஆகியோரின் உதவியுடன் 16 ஆளுமை வகை அமைப்பை உருவாக்கினார். இது 4 முக்கிய அளவுகளின் கீழ் தனி நபர்களை வகைப்படுத்துகிறது. 

Extrovert/Introvert: இது நாம் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. Extrovert குணம் கொண்டவர்கள் சமூகத்தில் அதிகமாக செயல்படுகிறார்கள்.‌ அதேபோல Introvert குணம் கொண்டவர்கள் தனியாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர். 

Intuition: இது நமது உள்ளுணர்வு எத்தகையது என்பதைத் தீர்மானிக்கிறது. இத்தகைய குணம் கொண்டவர்கள் தங்களின் உணர்வுகளின் அடிப்படையாக எல்லாம் முடிவுகளையும் எடுத்து எதிர்கால சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து அனைத்திலும் கவனத்துடன் இருப்பார்கள். 

Thinker/Feeler: இது நாம் முடிவுகளை எவ்வாறு எடுக்கிறோம் என்பதைத் குறிப்பதாகும். சிந்தனையாளர்கள் நியாய தர்மம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல உணர்வாளர்கள் தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார்கள். 

Judgmental/Perception: இந்த குணங்கள் நாம் உலகத்துடன் எதன் அடிப்படையில் தொடர்பு கொள்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. தீர்ப்பாளர்கள் தற்போது இருக்கும் அமைப்பு மற்றும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அனைத்தையும் சரியாக உணர்பவர்கள் அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

இதையும் படியுங்கள்:
Zeta Male Personality: தனித்துவத்தை விரும்பும் ஆளுமை கொண்டவர்கள்! 
Personality Types

இந்த நான்கு அளவுகளின் கலவையில் 16 தனித்துவமான ஆளுமை வகைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு வகைக்கும் அதன் சொந்த பலங்கள் பலவீனங்கள் உள்ளன. இந்த 16 ஆளுமை வகைகளிலேயே இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் வருவார்கள். இவற்றின் முழு விளக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com