
நாம் எப்போதும் நம் குழந்தைகளுக்கு வெறும் அறிவை வளர்ப்பதற்கான முறையைத்தான் அதிகமாக கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் அதை அனுபவப் பூர்வமாக கற்று கொடுக்க நாம் முயற்சிப்பதில்லை. குழந்தைகளும் வெறும் மதிப்பெண்ணின் பின்னால் இருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. இன்றைய சூழ்நிலை அப்படி ஆகி விட்டது. வெறும் புத்தக அறிவை வைத்து வெற்றிபெற முடியுமா??என்று கேட்டால் நிச்சயமாக முடியாது. எந்தத் துறையிலும் theory மற்றும் நடைமுறை வேறுபட்டிருக்கும்.
தேவையான கல்வியை பயின்று வந்தாலும் சரியான நடைமுறை அனுபவம் இல்லாதவர்கள் சந்திக்கும் பிரச்னை:
இவர்கள் புத்தகத்தை முழுவதும் கரைத்து குடித்துவிட்டு கல்லூரியில் 9.5 cgpa வாங்கிவிட்டு பெருமையோடு வேலையில் நுழைகிறார்கள். நுழைந்த பிறகுதான் புரிகிறது கற்றவை வேறு இது வேறு என்று. எந்தத் துறையாக இருந்தாலும் என்னதான் கல்வி கற்றாலும் நடைமுறைக்கு அனுபவம்தான் தேவை . அந்த அனுபவத்தை பெறும் வரை நிறைய இளைஞர்கள், இளைஞிகிகள் கஷ்டப்படுகிறார்கள்.
எந்த அலுவலமாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும் ஏன் அவர்கள் படிப்புத் தகுதியை மட்டும் கேட்காமல் எத்தனை வருடம் அனுபவம் என்று கேட்கிறார்கள்? ஏனென்றால் ஒரு பிரச்னை வந்துவிட்டால் அங்கே படிப்பை விட அனுபவம் தான் முக்கியம்.
உதாரணத்திற்கு நடைமுறை வாழ்க்கையில் நமக்கு சமையல் தெரிய வில்லை என்றால் யாரிடமோ கேட்டோ அல்லது you tube ஐ பார்த்தோ சமைக்கும்போது நமக்கு முழுவதும் சரியாக வராது. ஏதாவது குறை இருக்கத்தான் செய்யும். இரண்டு மூன்று முறை செய்யும் போதுதான் நமக்கே ஒரு ஐடியா கிடைக்கும் எதை கூட்ட வேண்டும் எதைக் குறைக்கவேண்டும் என்று.
அதைப் போலத்தான் அலுவலக வேலையும். வெறும் படிப்பு அறிவு இருந்தால் மட்டும் போதாது.
தகுந்த கல்வியை பயிலாமல் அனுபவத்தினால் வேலை செய்வர்களுக்கு ஏற்படும் பிரச்னையை பார்ப்போம்:
வெறும் அனுபவத்தினால் நீங்கள் நினைக்கும் வேலை கிடைக்காது, அப்படியே கிடைத்தாலும் அந்த வேலைக்குரிய தகுதி இல்லையென்றால் உங்களை மிக குறைவான சம்பளத்தில் மிகத் தாழ்மையான பதவியில் அமர்த்துவார்கள். உங்களுக்கு engineering படித்துவிட்டு வந்தவர்களை விட அதிகப்படியான knowledge இருந்தாலும் உங்களை low level ல்தான் வைத்திருப்பார்கள், அதே சமயம் உங்களிடமிருந்து எல்லா ஆலோசனையையும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு பதவியில் முன்னேற்றம் அடைவது மிகக்கடினம்.
ஆகவே ஒருவருக்கு சரியான முன்னேற்றம் வேண்டுமென்றால் படிப்பும் தேவை அதே சமயத்தில் நீங்கள் படிக்கக் கூடிய அந்த குறிப்பிட்டத் துறையை சேர்ந்த வேலையின் நடைமுறை அனுபவத்தை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவும் அனுபவமும் இரண்டு கண்கள். ஒரு கண் மட்டும் தெரிந்தால் நம்மால் சரியாக பார்க்க முடியுமா? வேலைகளை செய்ய முடியுமா? முடியாது இல்லையா? ஆகவே முன்னேற்றத்திற்கு கல்வி அறிவு மற்றும் அனுபவம் இரண்டும் முக்கியம். இதில் ஒன்று குறைந்தாலும் நம் முன்னேற்றமும் தடைபடும்.