அது ஒரு புகழ் பெற்ற மேனேஜ்மெண்ட் கல்லூரி. அங்கு பல மாணவ, மாணவியர்கள் பல்வேறு கோர்ஸஸ் படித்துக்கொண்டு இருந்தனர்.
ஒரு குறிப்பிட்ட விசிட்டிங் ப்ரொபாசர், சில வகுப்புகளுக்குப் பாடம் நடத்த வருவார்.
அவ்வாறு ஒரு வகுப்பிற்குச் செல்லும்பொழுது ஒரு மாணவனின் செய்கை சற்று வேறுபட்டு இருப்பதை, சில நாட்கள் பார்த்தார்.
அந்த வகுப்பிற்கு காலையில் முதல் க்ளாஸ் இவரது. இவர் சிறிது முன்னதாகவே சென்று விடுவார். மாணவ, மாணவியர்களுடன் பொதுவாக பேசிக்கொண்டு இருப்பார். யாராவது சந்தேகம் கேட்டால் விவரித்து கூறுவார் . இவருடைய ஸ்பெஷாலிட்டி மாணவர், மாணவியர்களுக்குப் புரியும்படி விளக்கி கூறும்பொழுது உண்மையான அல்லது பிரக்டிக்கலான உதாரணங்கள் கூறுவது. நகைச்சுவையுடன் வகுப்பு நடத்துவது, மாணவ, மாணவியர் கூறும் கருத்துகளுக்கும், அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது. இதனால் இவர் வகுப்பில் மகிழ்ச்சியோடு கற்றுக்கொள்ள வருவார்கள்.
அந்தக் குறிப்பிட்ட மாணவனுடன் உரையாடி அவனைப் பற்றி அறிந்துக்கொண்டு, அவன் செய்கைக்குக் காரணம் கேட்டு தெரிந்துக்கொண்டார்.
அடுத்த நாள் காலை அந்த கல்லூரியின் டைரக்டர் அறைக்கு சென்றார். குறிப்பிட்ட அனுபவம் மிக்க விசிட்டிங் ப்ரொபாசர் கல்லூரிக்கு வருவார், தன் வேலையைப் பார்த்து விட்டு செல்வார். அவர் தன் அறைக்கு வந்தது வியப்பில் ஆழ்த்தியது டைரக்டருக்கு. வந்தவரை வரவேற்று அமர செய்தார். வந்த விசிட்டிங் ப்ரொபாசர் தான் ஒரு மாணவனை பற்றி கூற வந்துள்ளேன் என்றதும், டைரக்டர் திடுக்கிட்டார். அந்த மாணவன் பற்றி புகார் அளிக்க வந்து இருப்பதாக, கருதி.
வந்தவர் மாணவன் பெயர்,வகுப்பு விவரம் கூறி உடனே அந்த மாணவனை டைரக்டர் அறைக்கு வரும்படி கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கூடவே மாணவன் வந்ததும் விவரம் புரியும் என்று சஸ்பென்சாக கூறினார்.
மாணவன் வந்தான் நடுங்கிக்கொண்டே, ஏன் என்றால் டைரக்டர் மிகவும் ஸ்ட்ரிக்ட்.
வந்தவன் காலை வணக்கம் இருவருக்கும் கூறி விட்டு நின்றான். ஏன் அழைத்தார்கள் என்று புரியவில்லை அவனுக்கும், டைரக்டருக்கும்.
விசிட்டிங் ப்ரொபாசர், இந்தக் குறிப்பிட்ட மாணவரைப் பாராட்டவே அதுவும் தங்கள் முன்பு செய்யவே இவ்வளவும் செய்தேன் என்று கூறி விளக்கினார்.
அதைக் கேட்ட இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். விவரம் அறிந்ததும் டைரக்டர் எழுந்து நின்று அந்த மாணவருக்கு கை கொடுத்து தனது பாராட்டுதலை வழங்கினார். அந்த மாணவர் திக்குமுக்காடிப் போனார். மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற அவர் ஆனந்த கண்ணீருடன் மனதார நன்றிகளை கூறினார், இருவருக்கும்.
விசிட்டிங் ப்ரொபாசர் கூறினார், " நான் இவரது செய்கையினால் கவரப்பட்டு அவரிடம் உரையாடி காரணம் கேட்டு அறிந்தேன். அவர் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்பொழுதே முடிவு செய்தேன், இவருக்கு பாராட்டு தங்கள் முன்னிலையில் அளிக்க வேண்டும் என்று," என்றார்.
டைரக்டர் மகிழ்ந்து கூறினார், " இது அல்லவோ ரியல் மோட்டிவேஷன்.
(real motivation) இந்த மாணவருக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்கள், நன்றிகள், " என்றார்.
மாணவர் திருப்பி அனுப்பப்பட்டார், வாழ்த்துக்களுடன்.
பயத்துடன் வந்த அந்த மாணவர், பூரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பினார். அவர் இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.
பிறகு அந்த விசிட்டிங் ப்ரொபசரரை தனியாகச் சந்தித்து, தனது நன்றியை கூறினார், அந்த மாணவர்.
அதற்கு அந்த ப்ரோபாசர் கூறிய பதில், "You have done. You deserve. Best wishes..!"
அது சரி... அப்படி என்ன செய்தார் அந்த மாணவர்? தெரிந்துகொள்வோமா?
பிளாஷ் பாக்!
அந்த குறிப்பிட்ட ப்ரொபாசர் சில தினங்களாக கவனித்தார். அந்த குறிப்பிட்ட மாணவர் லைப்ரரியிலிருந்து எடுத்து வந்த லேட்டஸ்ட் மேகசீனின் கட்டுரைகளிலிருந்து பார்த்து, சில முக்கிய பகுதிகள், குறிப்புகள் இவற்றை தனது நோட்டு புத்தகத்தில் எழுதிக்கொண்டு இருந்தார். மற்ற மாணவ, மாணவியர்கள் பேசிக்கொண்டும், அவர்களுக்குள் விளையாடிக்கொண்டும் இருக்கும்பொழுது, இவர் மட்டும் தனது இந்த குறிப்பு எடுக்கும் வேலையில் சின்சியாராகவும், கண்ணும், கருத்துமாகவும் இருந்தார்.
அவரிடம் இந்த ப்ரொபாசர் வினவினார், ‘ஏன் அப்படி செய்கிறீர்கள்,’ என்று. அதற்கு அந்த மாணவர் கூறினார், "நான் ஒரு ஏழை. அவ்வளவாக படிக்காத பெற்றோர் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து என்னை படிக்க வைக்கிறார்கள். எனக்கு மேலும் படிக்க வேண்டும் என்று ஆர்வம். எங்கள் குடும்பச் சூழ்நிலை எனக்கு நன்கு தெரியும். அதனால் ஒவ்வொரு பைசாவும் பார்த்து செலவு செய்கிறேன். எனவே இவற்றை ஜெராக்ஸ் செய்ய விருப்பம் இல்லை. மேலும், முக்கியமாக நான் பார்த்து , படித்து எழுதிக்கொண்டால் மனதில் நன்கு பதியும். தேவை ஏற்படும்பொழுது இந்த மேகசீன்கள் கிடைக்காது. பிராஜக்ட் செய்யும்பொழுது இந்த விவரங்கள் எனக்கு உதவும். நேரம் போனால் திரும்பாது. எனவே இவ்வாறு செய்கிறேன்," என்று அந்த மாணவர் கூறியது, இந்த விசிட்டிங் ப்ரொபாசரை அசத்தியது.
மோட்டிவேஷன் என்பது அந்தப் பாராட்டைப் பெறுபவருக்கு ஏற்படும் ஒரு வகை மனநிறைவு.
பாராட்டுப் பெற்றவரை மகிழச் செய்யும். மேலும் உத்வேகத்துடன் செயல்பட வழி வகுக்கும்.
இது ஒரு வகை self satisfaction. முக்கியமாக மோட்டிவேஷன் பற்றி படித்து, கேட்டு அறிந்துக்கொள்ளவோ , தெரிந்துக்கொள்ளவோ முடியாது. சுய அனுபவமே சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.
பிறரை பாராட்டும்பொழுது, உண்மையாக மனநிறைவோடு பாராட்ட பழகுங்கள்.
பிறருக்கு motivation மூலம் கிடைக்கப் பெரும் உற்சாகத்தை அளவு கோலால் அளவிட முடியாது.
(உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.)