இப்படி இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்! 

Handsome men
What kind of men do women like the most?
Published on

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். ஒவ்வொருவரின் விருப்பங்கள், பார்வைகள், மதிப்பீடுகள் என அனைத்துமே வேறுபட்டிருக்கும். இதில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு என்பது இயற்கையானது. இருப்பினும், பொதுவாக பெண்களுக்கு எதுபோன்ற ஆண்களை அதிகம் பிடிக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

உடல் தோற்றம்: பொதுவாகவே பெண்கள் ஆண்களின் உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், இது ஒவ்வொரு தனிநபர் விருப்பங்களின் அடிப்படையில் மாறுபடலாம். சில பெண்களுக்கு கட்டுமஸ்தான உடல் பிடிக்கும் என்றால், சிலருக்கு மெல்லிய உடல் வாகு மிகவும் பிடிக்கும். ஆனால், எல்லா பெண்களுக்குமே நன்கு பராமரிக்கப்பட்ட உடல் தோற்றம் மிகவும் பிடிக்கும். 

ஆளுமை: உடல் தோற்றத்தை விட பெண்கள் ஒரு ஆணின் ஆளுமையை அதிகமாக மதிக்கின்றனர். நம்பகத்தன்மை, நேர்மை, நகைச்சுவை உணர்வு, புரிதல், பாசம் போன்ற குணங்கள் பெண்களை அதிகமாக ஈர்க்கின்றன. மேலும், ஒரு பெண்ணின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவளுக்கு ஆதரவாக இருக்கும் ஆண்கள் மீது பெண்கள் அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள். 

பொருளாதாரம்: சமூகநிலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவை ஒரு ஆணின் ஈர்ப்பு தன்மையை அதிகரிக்கும் முக்கிய காரணிகள். பெரும்பாலான பெண்கள் தன்னைவிட சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஆண்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும் விஷயமல்ல. சில பெண்கள் தன்னம்பிக்கை மிக்க, திறமையான ஆண்களை அதிகம் விரும்புகின்றனர். 

புத்திசாலித்தனம்: ஆண்களின் புத்திசாலித்தனம் மற்றும் அறிவு பெண்களை வெகுவாகக் கவரும் அம்சங்கள். ஒரு ஆண் தனது துறையில் சிறந்து விளங்கினால் அது பெண்களை ஈர்க்கும். மேலும், ஒரு ஆண் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தால், அது பெண்களுக்கு பிடிக்கும். 

இலக்கு: ஒரு ஆண் தனது வாழ்க்கையில் இலக்குகள் மற்றும் லட்சியங்கள் கொண்டிருப்பது பெண்களுக்கு அவர்களை சிறப்பாகக் காட்டும். தனது இலக்குகளை நோக்கி உழைக்கும் ஆண்கள், பெண்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வார்கள் என பெண்கள் நம்புகின்றனர். 

இதையும் படியுங்கள்:
உயர்வுக்குத் தடையாக இருப்பது தாழ்வு மனப்பான்மை. வெற்றிக்கு வித்திடுவது தன்னம்பிக்கை!
Handsome men

சுயபுத்தி: சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை ஒவ்வொரு பெண்ணும் ஆண்களிடம் தேடும் முக்கியமான குணங்கள். தனது முடிவுகளை தானே எடுத்து அதற்கு பொறுப்பு ஏற்கும் ஆண்களை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். 

மேலே குறிப்பிட்ட குணங்களை கொண்ட ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர். நீங்கள் இந்த விஷயங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம், பெண்களுக்கு உங்களை நீங்கள் சிறப்பான நபராகக் காட்டிக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com