
தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் நிச்சயம் தவறு செய்து இருப்போம். ஒரு தவறு நடந்துவிட்டால் அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அப்படி திருத்திக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அந்த தவறை நாம் செய்யும்பொழுதுதான் நாம் மிகப்பெரிய குற்றவாளியாகிறோம்.
தவறு செய்து விட்டோம் இனி அந்த தவறை செய்யக்கூடாது என முடிவு செய்து அவன் நல்வழி நடக்கும் பொழுது நாம் உயர்ந்த இடத்துக்கு செல்கிறோம். இந்த சமுதாயம் நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சூழ்நிலையின் காரணமாக அல்லது பல்வேறு அலட்சியத்தின் காரணமாக நாம் செய்யும் தவறுகள் தொடரக்கூடாது. தொடரவும் விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்துவிட்டால் இந்த சமுதாயத்தை நாம்மை நிச்சயமாக உயர்ந்த நிலைக்கி தூக்கி செல்லும். நல்வழியில் செல்ல நமக்கு நல்வழி காட்டும் நிறைய புத்தகங்கள் உண்டு அதில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் அவர்கள் பெற்று அனுபவங்களை படித்தாலே போதும். இவைகளை உணர்த்தும் ஒரு சிறுகதைதான் இப்பதிவில்.
தன் குடும்ப வறுமை காரணமாகப் படிப்பதை விட்டுத் திருடனாக மாறினார் கிளாட் கிரே பில்லன் என்பவர். பிரெஞ்சு தேசத்தில் 1907ல் பிறந்த இவர் திருட்டுப் பட்டம் வாங்கிச் சிறைக்குச் சென்றார்.
சிறைவாசம் முடிந்து வந்ததும் ஆபாசப் புத்தகங்களை எழுதியதால் மீண்டும் சிறை சென்றார். பின்பு நாட்டைச் சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் ஐந்து ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இந்தக் காலத்தில்தான் தன் செயல்களை எண்ணி வருந்தித் திருந்தினார் பில்லன்.
நேர்மையாக வாழவேண்டும் என்று முடிவு செய்தார். நாடு திரும்பியதும் மீண்டும் கல்வி கற்றார். பல நூல்களைப் படித்தார். பட்டங்கள் பெற்று வழக்கறிஞராக மாறினார். அதன் பிறகு பிரெஞ்சு தேசமே புகழும் நீதிபதியாக மாறினார். சென்சார் போர்டின் நீதிபதியாக உயர்ந்தார். மனம்போன போக்கில் வாழ்ந்த மனிதர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, உழைத்து உன்னத நிலையை அடைந்தார்.
தவறு செய்யும் மனிதர்கள் நல்ல தடம் நோக்கி மாறுகின்றபோது மதிப்படைகிறார்கள் என்பதற்கு பில்லனும் ஒரு எடுத்துக்காட்டு. நல்ல நூல்களைப் படித்ததன் மூலம்தான் நல்ல மனிதராக மாறினார் என்பது எழுத்தின் வலிமையைக் காட்டுகின்றது.
"உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் நடப்பதே அறிவாகும். "இது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இதை மனதில் ஏற்றுங்கள் இனி நாம் போகும் பாதை சரியா என்பதை யோசித்து தவறு இருப்பேன் திருத்திக் கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கையின் உச்சத்தை அடைய வைக்கும்.