
1. உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
தன் முயற்சியில் தோல்வி அடையும் போது வருத்தம், கவலை, மன அழுத்தம், கோபம் போன்ற உணர்வுகள் ஒருவரை ஆட்கொள்வது சகஜம். அவை அவரை மேலும் கடின உழைப்புக்கு வழி வகுக்கும். எனவே இத்தகைய உணர்ச்சிகளை விலக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. தோல்வி என்பது உங்கள் வாழ்க்கையின் முடிவு அல்ல
நிறையப் பேர் ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டால், தங்கள் எதிர்காலமே சூனியமாகி விட்டது என்று நம்பத் துவங்குகிறார்கள். அந்தத் தோல்வி உங்கள் முயற்சிக்கு ஏற்பட்ட தோல்வியே தவிர உங்களுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல என்பதை உணருங்கள்.
3. தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் உங்கள் முயற்சியில் என்ன தவறு செய்தீர்கள் என்று கவனமாக ஆராய்ந்து உணர்ந்து கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த தவறை மறுபடி செய்யாதீர்கள்.
4. மீண்டும் முயற்சி செய்யுங்கள்
தோல்விக்கு பயந்து முயற்சியைக் கைவிடக்கூடாது. கீழே விழுந்தால் எழுவது சகஜம் தானே? உங்களை நீங்களே மகிழ்ச்சி படுத்திக் கொண்டு உங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற முழுதாக நம்புங்கள். யார் தொடர்ந்து முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி வந்து சேரும்
6. இலக்கை இன்னும் தீவிரமாக நேசியுங்கள்
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை தீவிரமாக விரும்பாமல் இருந்தது கூட உங்கள் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை இன்னும் இன்னும் தீவிரமாக நேசியுங்கள்.
7. உற்சாகமூட்டும் உற்றமும் சுற்றமும்
தோல்வியுறும்போது உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் நலனில் விருப்பமுள்ள குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் சூழ இருக்க வேண்டும். அவர்கள் நேர்மறை எண்ணம் கொண்டவர் களாக இருப்பது அவசியம். அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டுவார்கள்.