அன்புக்கும் உண்டு அளவு: அதிகமாக விதைக்காதீர்... அறுவடை செய்வது கடினம்!

children offered gift to their father
children offered gift to their father
Published on

யாரிடம் அன்பு செலுத்துவது?

நம் ஒவ்வொருவரும் அன்பை நம்முடைய பெற்றோர்களிடத்தில் அதிகமாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகிற மனிதர்கள் ஒரு சில பேர் மட்டுமே ஆங்காங்கே இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள், தங்கள் குடும்பத்தை தவிர்த்து மூன்றாவது மனிதர்களிடம் அன்போடு அதிகமாக பழகுகிறார்கள். இப்படி அன்போடு அதிகமாக பழகுகின்றவர்கள் சிறு சிறு சண்டைகளின் மூலம் பிரிவு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அன்பானது தங்களை வளர்த்த பெற்றோர்களிடம் அதிகமாக இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

அன்பை எதிர்பார்க்க வேண்டாம்!

நாம் ஒருவரிடம் அன்பாக பழகி கொண்டிருப்போம். ஆனால் அவர்களும் நம்மோடு பழக வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைத்து நமக்கு என்னாகப் போகிறது? அவர்கள் நம் வாழ்க்கையில் இடையில் வந்தவர்கள் இறுதி வரை வரப் போவதில்லை. அவர்களிடம் நாம் ஏன் அன்பை எதிர்பார்க்க வேண்டும்? யாரிடமும் அன்பை எதிர்பார்க்க வேண்டாம். அது தானாக வரவேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகளிடம் அன்பைச் செலுத்துங்கள். அது உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பணக்காரன் ஆவதற்கு ஒரு சயின்ஸ் இருக்கு… 100 வருடம் பழமையான ரகசியம்!
children offered gift to their father

அனைவரிடமும் அன்பு வேண்டும்!

இந்தக் காலத்தில் யார் அன்புடன் இருக்கிறார்கள். எல்லாம் வம்புடனே இருக்கிறார்கள். அனைவரிடத்திலும் அன்பு இருக்க வேண்டும். எல்லோரும் அன்புடன் பேசினால் எந்த ஒரு பிரச்னையும் நிகழாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போனால் யாரும் கெட்டுப் போவதில்லை! இந்த மனநிலையை ஒவ்வொரு மனிதரும் அறிந்து அனைவருடமும் அன்புடன் பழகுதல் வேண்டும்.

அன்பு ஒன்றுதான் அனாதையாக்கும்!

நாம் யாரிடம் அதிகமாக அன்பு செலுத்தி பழகுகிறோமோ, அவர்கள் தான் நம்மை வெறுக்கிறார்கள். நம்மிடம் அதிகமாக நெருங்கி பழகிவிட்டு மற்றொரு நண்பர்களோ, உறவினர்களோ கிடைத்துவிட்டால் நம்மிடம் உள்ள பாசம், நேசம், அன்பு இவை எல்லாம் எட்டா கனியாக எங்கோ மறைந்து போகிறது.

பெற்றோர்களிடம் மட்டும் அன்பு அதிகம் வேண்டும்.

உடன் பிறந்தவர்களிடமும் அன்பு வேண்டும். நல்ல நண்பர்களிடமும் அன்பு வேண்டும். இப்படி எல்லோரிடமும் அன்பு வேண்டும் ஆனால், அதிகம் வேண்டாம். அன்பை அதிகமாக விதைத்து விட்டால் அறுவடை செய்வது கடினம். ஆகையால், அன்போடு இருங்கள். அளவோடு வாழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com